Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று மூன்றாவது டி 20 போட்டி… வெற்றி பெற்று தொடரை வெல்லுமா இந்தியா?

Webdunia
செவ்வாய், 28 நவம்பர் 2023 (10:01 IST)
இந்தியாவுக்கு 5 டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட வந்துள்ளது ஆஸ்திரேலிய அணி. இதில் முதலில் நடந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் இரண்டாவது போட்டி திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. அந்த போட்டியிலும் இந்திய அணி அபார வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில் இன்று மூன்றாவது டி 20 போட்டி கவுகாத்தியில் நடக்க உள்ளது. இதை வெல்லும் பட்சத்தில் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட தொடரை வெல்லும். சூர்யகுமார் யாதவ் தலைமையில் இளம் வீரர்கள் கொண்ட இந்திய அணி மிகச்சிறப்பாக விளையாடி இந்த ஆஸி அணியை வீழ்த்தி வருகிறது.

பேட்டிங்கில் ஜெய்ஸ்வால், ருத்துராஜ், இஷான் கிஷான், சூர்யகுமார் யாதவ் மற்றும் ரிங்கு சிங் ஆகியோர் கலக்கி வருகின்றனர். இந்நிலையில் இன்றைய போட்டியில் வென்றால் மட்டுமே தொடரை வெல்லும் வாய்ப்பை தக்க வைக்க முடியும் என்பதால் ஆஸி அணியும் கடுமையாக போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

11 பந்துகளில் 4 சிக்ஸர்கள்… ஸ்ட்ரைக் ரேட் 282.. கவனம் ஈர்த்த சென்னை அணியின் புதுவரவு உர்வில் படேல் !

இவர்தான் இந்திய டெஸ்ட் அணிக்கு அடுத்த கேப்டனா?... வெளியான தகவல்!

‘அதெல்லாம் இப்போ சொல்றதுக்கில்ல..’ – ஓய்வு குறித்த கேள்விக்கு தோனியின் பதில்!

100 முறை அவுட் இல்லை.. 200 பேர் அவுட்.. நேற்றைய போட்டியில் தல தோனியின் சாதனைகள்..!

ஈடன் கார்டன் மைதானத்தில் ஒலிக்கப்பட்ட தேசிய கீதம்.. ‘ஆபரேசன் சிந்தூர்’ வெற்றிக்கு வாழ்த்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments