Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒருவழியாக தாய்நாடு திரும்பிய இந்திய வீரர்கள்…. உற்சாக வரவேற்பு!

vinoth
வியாழன், 4 ஜூலை 2024 (09:25 IST)
உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் இந்திய அணி தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தி பரபரப்பான போட்டியின் முடிவில் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது. கோப்பை வென்ற பிறகு இந்திய வீரர்கள், பயிற்சியாளர் டிராவிட் உள்ளிட்ட பலரும் மிகவும் எமோஷனலாக காணப்பட்டனர்.

கிட்டத்தட்ட 11 ஆண்டுகளாக இந்திய அணி  எந்தவொரு ஐசிசி கோப்பையையும் வென்றதில்லை. இதனால் கடுமையான விமர்சனங்களைப் பெற்ற இந்திய அணிக்கு இந்த வெற்றி பெறும் ஆறுதலாக அமைந்துள்ளது. ரோஹித், கோலி மற்றும் ஜடேஜா ஆகியோர் ஓய்வை அறிவித்துள்ள நிலையில் அவர்கள் வெற்றிக் கோப்பையோடு செல்வது ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியான ஒன்றாக அமைந்துள்ளது. இந்திய அணிக்கு பிசிசிஐ 125 கோடி ரூபாய் பரிசுத்தொகை அறிவித்துள்ளது.

இந்நிலையில் உலகக் கோப்பை வெற்றியை தாய்நாட்டில் கொண்டாட வேண்டுமென்ற வீரர்களின் ஆசையை இயற்கை சீற்றம் தடுத்தம். அவர்கள் தங்கியிருந்த பார்படாஸ் பகுதியில் பெரில் புயல் வீசியதால் விமான நிலையங்கள் மூடப்பட்டன. இந்நிலையில் 2 நாட்கள் தாமதத்துக்குப் பிறகு இன்று அதிகாலை வீரர்கள் மும்பை ஏர்போர்ட் வந்தடைந்தனர். அவர்களுக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை அணியைப் பாருங்க.. அதுதான் வீரர்களுக்கு வேண்டும் – லக்னோ அணி உரிமையாளரை சீண்டிய ராகுல்!

நானும் கோலியும் அந்த போட்டியில் செய்த தவறு குறித்து இன்னமும் பேசிக்கொண்டிருக்கிறோம்- மனம் திறந்த ராகுல்!

‘ஏன் அவரு இவ்ளோ கோபப்படுறாரு?.. நான் சொன்னத கோலியே ஒத்துப்பாரு’- சாந்தமாக பதில் கொடுத்த பாண்டிங்!

டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பவுலிங் பயிற்சியாளராக முன்னாள் இந்திய வீரர்!

சுதந்திரமாக விளையாடும் அணியே தேவை.. LSG அணிக்குப் பதிலடி கொடுத்த கே எல் ராகுல்!

அடுத்த கட்டுரையில்
Show comments