ஐபிஎல் 14வது சீசன் இரண்டாம் பகுதி போட்டிகள் தற்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்து வருகிறது.
இந்நிலையில், இன்று இரவு 7;30 மணிக்கு நடைபெறும் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின.
இதில், டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பந்து வீச்சுத் தேர்வு செய்தது. எனவே முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 20 ஓவர்கள் முடிவில் 125 ரன்கள் எடுத்தது.
இதையடுத்துக் களமிறங்கிய ஐதராபாத் அணியினர் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 120 ரன்கள் மட்டும் எடுத்தனர். இதனால் பஞ்சாப் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.