Publish Date: Tue, 02 May 2023 (21:37 IST)
Updated Date: Tue, 02 May 2023 (21:41 IST)
இன்றைய ஐபிஎல் லீக் போட்டியில் டெல்லி அணி 131 ரன்களை குஜராத் அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
ஐபிஎல் தொடரின் 44வது போட்டி இன்று டெல்லி மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையே நடைபெற இருக்கும் நிலையில் இன்றைய போட்டியில் டெல்லி அணியின் கேப்டன் டேவிட் வார்னர் டாஸ் வென்று அதிரடியாக பேட்டிங் செய்ய தேர்வு செய்தார்.
அதன்படி, தொடக்க வீரர்கள் சால்ட் மற்றும் வார்னர் இருவரும் சொதப்பினர். பின்னர் வந்த கார்க் 10 ரன்களும், படேல் 27 ரன்களும், ஹகிம் கான் 51 ரன்களும், படேல் 23 ரன்களும் அடித்தனர்.
எனவே 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்கள் அடித்தனர்.
தற்போது 131 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி பேட்டிங் செய்து வருகிறது.
2.3 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 14 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.