Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயிச்சுட்டா.. அதுக்காக இப்படியா? – ஆவேஷ் கான் மேல் ஆவேசமான ஐபிஎல் நிர்வாகம்!

Webdunia
செவ்வாய், 11 ஏப்ரல் 2023 (09:06 IST)
நேற்றைய ஐபிஎல் தொடரில் லக்னோ அணி வீரர் ஆவேஷ் கான் வெற்றிக்களிப்பில் செய்த செயலுக்கு ஐபிஎல் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதிக் கொண்டன. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 20 ஓவர்கள் முடிவில் 212 ரன்களை குவித்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. விராட் கோலி (61), பாப் டு ப்ளஸி (79), மேக்ஸ்வெல் (59) என ரன்களை குவித்தனர்.

ஆனால் அடுத்து லக்னோ அணி களமிறங்கியபோது மோசமான பவுலிங்கால் ரன்களை அதிகம் விட்டது ஆர்சிபி. மேலும் மார்கஸ் ஸ்டாய்னிஸ், நிக்கோலஸ் பூரனின் அதிரடி ஆட்டத்தால் லக்னோ அணியின் ஸ்கோர் எகிற 20 ஓவர் முடிவில் 213 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது.

இந்த போட்டியின் இறுதியில் வெற்றி வாய்ப்புக்கு அருகே இருக்கையில் நிக்கோலஸ் பூரன் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஆவேஷ் கான் ஒரு பந்து மட்டுமே சந்தித்த நிலையில் அதிலும் ரன் எதுவும் எடுக்கவில்லை. எனினும் போட்டியில் வெற்றி பெற்றதும் உற்சாகமான ஆவேஷ் கான் தனது ஹெல்மெட்டை மைதானத்திலேயே தூக்கி வீசினார். இவர் அவ்வாறு செய்தது சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.

ஆவேஷ் கான் கிரிக்கெட் உபகரணங்களை சேதப்படுத்துவது குற்றம் என நடத்தை விதிகள் பிரிவு 2.2ன் கீழ் அவரை கண்டித்துள்ளது ஐபிஎல் நிர்வாகம்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என்னா திமிறு இருக்கணும்..? டெல்லி கேப்பிட்டல்ஸை புறக்கணிக்கும் ரசிகர்கள்! - இதுதான் காரணம்!

இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்புக்கு பும்ரா தகுதியானவர் –அஸ்வின் சொல்லும் காரணம்!

ஆர் சி பி அணிக்கு மேலும் பின்னடைவு… ரஜத் படிதார் விளையாடுவதில் சிக்கல்!

ஐபிஎல் மீண்டும் தொடங்கும்போது ‘அதெல்லாம்’ இருக்கக் கூடாது – சுனில் கவாஸ்கர் கோரிக்கை!

ப்ரீத்தி ஜிந்தாவை மேக்ஸ்வெலுடன் தொடர்பு படுத்தி பேசிய ரசிகர்! - ப்ரீத்தி ஜிந்தா கொடுத்த பதிலடி!

அடுத்த கட்டுரையில்
Show comments