Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பஞ்சாப் கிங்ஸ் லெவன்- கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில் மழை குறுக்கீடு

Webdunia
சனி, 1 ஏப்ரல் 2023 (19:46 IST)
பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான போட்டியில் கொல்கத்தா அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.

எனவே பஞ்சாப் கிங்ஸ் முதலில் பேட்டிங் செய்த நிலையில், அந்த அணியின் பரமிஸ்ம்ரான் 23 ரன்களும், தவான் 40 ரன்களும், ராஜபக்சே 50 ரன்களும்,சர்மா 21 ரன்களும், கரண் 26 ரன்களும் எடுத்தனர். 20 ஓவர் முடிவில் இந்த அணி 5 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்து, கொல்கத்தா அணிக்கு 192 ரன்கள் வெற்றி இலக்கான நிர்ணயித்துள்ளது.

கொல்கத்தா அணி சார்பில், உமேஷ் யாதவ் , சுனில் , சக்ரவர்த்தி தலா 1 விக்கெட் கைப்பற்றினர். டிம் சவுத்திரி 2 விக்கெட்டுகள் வீழ்தினார்.

இதையடுத்து 192 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய  கொல்கத்தா அணியில், மந்தீப் சிங். குர்பாஸ் ஆகியோர் தொட்டக் ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.

இதில், மந்தீப் 2 ரன், அனுகூல் ராய் 4 ரன், குப்ராஸ் 22  ரன்களுடன் அவுட்டாகினர். இதையடுத்து வந்த ராணா 22 ரன்கள், ரிங்கு சிங் 4 ரன், ரஸல் 35 ரன்கள், வெங்கடேஷ் அய்யர் 35 ரனகள் எடுத்தபோது அவுட்டாகினர்.

கொல்கத்தா அணி 16 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் எடுத்தபோது, மழை பெய்ததால், ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

மழை நின்றபின் ஆட்டம் மீண்டும் தொடங்கப்படும் என்றும், தொடர்ந்து மழை பெய்தால் டக்வொர்த் லீவிஸ் முறையில் கடைப்பிடிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை அணியைப் பாருங்க.. அதுதான் வீரர்களுக்கு வேண்டும் – லக்னோ அணி உரிமையாளரை சீண்டிய ராகுல்!

நானும் கோலியும் அந்த போட்டியில் செய்த தவறு குறித்து இன்னமும் பேசிக்கொண்டிருக்கிறோம்- மனம் திறந்த ராகுல்!

‘ஏன் அவரு இவ்ளோ கோபப்படுறாரு?.. நான் சொன்னத கோலியே ஒத்துப்பாரு’- சாந்தமாக பதில் கொடுத்த பாண்டிங்!

டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பவுலிங் பயிற்சியாளராக முன்னாள் இந்திய வீரர்!

சுதந்திரமாக விளையாடும் அணியே தேவை.. LSG அணிக்குப் பதிலடி கொடுத்த கே எல் ராகுல்!

அடுத்த கட்டுரையில்
Show comments