Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே போட்டியில் ஐசிசி தரவரிசையில் உச்சம் தொட்ட ஜடேஜா!

Webdunia
புதன், 9 மார்ச் 2022 (16:38 IST)
இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஜடேஜா ஐசிசி தரவரிசையில் முதல் இடத்தைப் பிடித்துள்ளார்.

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே மூன்றே நாளில் முடிவடைந்த முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்தவர் ஆல்ரவுண்டர் ஜடேஜாவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.  

பேட்டிங்கில்  7 ஆவது வீரராகக் களமிறங்கிய அதிரடியாக விளையாடி175 ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் களத்தில் இருந்தார். இதற்கு முன்னதாக இந்தியாவைச் சேர்ந்த கபில்தேவ் 7 ஆவது வீரராக களமிறங்கிய 169 ரன்கள் எடுத்ததே அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. அந்த சாதனையை ஜடேஜா முறியடித்தார். பேட்டிங்கில் கலக்கியது போலவே பவுலிங்கிலும் 9 விக்கெட்கள் வீழ்த்தி கலக்கினார். முதல்  இன்னிங்சில் இலங்கை அணியின் 5 விக்கெட்டுகளையும் இரண்டாவது இன்னிங்சில் 4 விக்கெட்டுகளையும் ஜடேஜா வீழ்த்தி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில் இன்று வெளியாகி ஐசிசி தரவரிசையில் ஜடேஜா ஆல்ரவுண்டர் பட்டியலில் முதல் இடம் பிடித்துள்ளார். அதுபோல பேட்டிங்கில் கோலி 5 ஆம்  இடத்திலும், ரோஹித் மற்றும் பண்ட் ஆகியவர்கள் 7 மற்றும் 10 ஆம் இடங்களில் உள்ளனர். அதுபோல பவுலிங்கில் அஸ்வின் மற்றும் பூம்ரா ஆகியோர் 2 மற்றும் 10 ஆம் இடங்களில் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாண்டிங் கோலிப் பற்றி கவலைப்படவேண்டாம்… அவர் வேலை அதுதான்… கம்பீர் நெத்தியடி பதில்!

சாம்பியன்ஸ் ட்ராபி விளையாட பாகிஸ்தானுக்கு செல்ல முடியாது… ஐசிசியிடம் தெரிவித்த பிசிசிஐ!

ரோஹித் விளையாட வரலைன்னா.. இவங்கதான் விளையாடுவாங்க! - கம்பீர் அதிரடி முடிவு!

இன்று பத்திரிக்கையாளர்களை சந்திக்கிறார் கம்பீர்… முக்கிய அறிவிப்பு வருமா?

இந்திய அணியோடு ஆஸ்திரேலியா செல்லாத ரோஹித் ஷர்மா.. முதல் டெஸ்ட்டில் பங்கேற்பாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments