Publish Date: Mon, 01 May 2023 (08:32 IST)
Updated Date: Mon, 01 May 2023 (08:01 IST)
ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான நேற்றைய போட்டியில் ராயல்ஸ் வீரர் ஜெய்ஸ்வால் 62 பந்துகளில் 124 ரன்கள் சேர்த்து வான வேடிக்கைக் காட்டினார். இந்நிலையில் கடைசி ஓவரில் அவர் அர்ஷத் கான் வீசிய புல்டாஸ் பந்தை அடிக்க, அது மேலெழும்பி கேட்ச் ஆனது.
ஆனால் அந்த பந்து இடுப்புக்கு மேல் வீசப்பட்ட நோ பாலா என நடுவர்கள் ரிவ்யூ செய்தார். முன்றாம் நடுவர் ரிப்ளையில் அது நோ பால் இல்லை என்ற முடிவை அறிவித்தார். ஆனால் அந்த பந்து ஜெய்ஸ்வாலின் இடுப்புக்கும் ஸ்டம்ப்புக்கும் மேல்தான் சென்றது. இது ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்தது.
இதையடுத்து சமூகவலைதளங்களில் ஜெய்ஸ்வால் அவுட்டா இல்லையா என்பது குறித்து காரசாரமான விவாதங்களே நடந்துள்ளன.