Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மும்பை இண்டியன்ஸுக்கு பயத்தைக் காட்டிய அஷுடோஷ் சர்மா.. பஞ்சாப் போராடி தோல்வி!

vinoth
வெள்ளி, 19 ஏப்ரல் 2024 (07:18 IST)
ஐபிஎல் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில் நேற்று மொகாலியில் பஞ்சாப் மற்றும்  மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதும் போட்டி நடந்து வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. அதன் படி களமிறங்கிய மும்பை அணி நிதானமான தொடக்கத்தை அமைத்தது.

அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் இஷான் கிஷான் 8 ரன்களில் ஆட்டமிழக்க சூர்யகுமாருடன் ரோஹித் ஷர்மா ஜோடி சேர்ந்தார். அவர்கள் இருவரும் சிறப்பாக விளையாட ரோஹித் 36 ரன்களில் ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடிய சூர்யகுமார் 53 பந்துகளில் 78 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட்கள் இழுப்புக்கு 192 ரன்கள் சேர்த்தது. பஞ்சாப் அணி சார்பாக ஹர்ஷல் படேல் அதிகபட்சமாக 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

இதன் பின்னர் பஞ்சாப் அணி பேட் செய்ய வரும் போது ஆரம்பத்திலெயே விக்கெட்களை இழந்து தடுமாறியது. முதல் 10 ஓவர்களுக்குள்ளேயே 6 விக்கெட்களை இழந்தது. ஆனால் அதன் பின்னர் ஜோடி சேர்ந்த ஷஷாங்க் சிங் மற்றும் அஷுடோஷ் சர்மா ஆகியோர் மிகச்சிறப்பாக விளையாடி இலக்கை நெருங்கினர். ஆனால் இருவரும் முக்கியமானக் கட்டத்தில் தங்கள் விக்கெட்களை இழந்ததால் பஞ்சாப் அணியால் 182 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது. இதன் மூலம் 10 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி தோற்றது. 3 விக்கெட்களைக் கைப்பற்றிய பும்ரா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தோனி விரும்பும்வரை சி எஸ் கே அணியின் கதவுகள் திறந்தே இருக்கும்… காசி விஸ்வநாதன் பேட்டி!

கம்பீருக்கு தயாராகிக் கொண்டிருக்கும் ஆப்பு… பார்டர் கவாஸ்கர் தொடர்தான் கடைசி வாய்ப்பு – பிசிசிஐ ஆலோசனை!

என்னால் கிரிக்கெட் விளையாட முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.. ஐபிஎல் எண்ட்ரி குறித்து ஆண்டர்சன் பதில்!

விமர்சனங்கள் எழுந்ததை அடுத்து முடிவை மாற்றிக்கொண்ட ரோஹித் ஷர்மா!

அடுத்தடுத்து இரண்டு சதம்… இந்திய வீரர்கள் யாரும் படைக்காத சாதனையை நிகழ்த்திய சஞ்சு!

அடுத்த கட்டுரையில்
Show comments