Publish Date: Tue, 03 Nov 2020 (10:09 IST)
Updated Date: Tue, 03 Nov 2020 (10:25 IST)
நடப்பு ஐபிஎல் தொடரில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிக மோசமாக தோல்வியை தழுவி பிளே ஆஃப்க்கு செல்லாமல் வெளியேறியுள்ளது.
சர்வதேசக் கிரிக்கெட்டில் இருந்து தோனி ஓய்வு பெற்றுவிட்டதை ஐபிஎல் தொடரில் அவரின் பேட்டிங்கைப் பார்க்கக் காத்திருந்தனர் கோடிக்கணக்கான ரசிகர்கள். ஆனால் அவர்களுக்கு தோனி ஏமாற்றத்தையெ பரிசாக அளித்தார். 14 போட்டிகளில் விளையாடிய அவர் ஒரே ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. இந்நிலையில் அடுத்த ஆண்டும் சிஎஸ்கே அணிக்காக விளையாடுவேன் எனக் கூறியுள்ளார்.
தோனியின் ஆட்டத்திறன் குறித்து முன்னாள் கேப்டன் கபில்தேவ் ஐபிஎல் போட்டிகளில் மட்டும் விளையாடினால் தோனியால் சிறப்பாக விளையாட முடியாது எனக் கூறியுள்ளார்.