Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“அஸ்வினை அணியில் எடுத்தது ஆச்சர்யமாக உள்ளது…” முன்னாள் வீரர் கிரண் மோரே கருத்து!

Webdunia
வியாழன், 11 ஆகஸ்ட் 2022 (09:01 IST)
ஆசியக்கோப்பைக்கான இந்திய அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாட அனுமதிக்கப்பட்டுள்ளார் அஸ்வின். ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகளில் அவருக்கு இடம் இல்லை. இந்நிலையில் கடந்த ஆண்டு நடந்த டி 20 உலகக்கோப்பை தொடரில் அவர் தேர்வு செய்யப்பட்டு விளையாட அனுமதிக்கப்பட்டார். ஆனால் அதன் பின்னர் தொடர்ந்து அவருக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை.

இந்நிலையில் இப்போது ஆசியகோப்பை தொடரில் அவர் மீண்டும் அணியில் இடம்பிடித்துள்ளார். இது சம்மந்தமாக பேசியுள்ள முன்னாள் வீரர் கிரண் மோரே “அஸ்வினை அணியில் எடுத்தது எனக்கு ஆச்சர்யமாக உள்ளது. அவரை அணியில் எடுக்கிறார்கள். பின்னர் அவர் ஆடும் லெவனில் விளையாடுவது இல்லை. இப்போது மீண்டும் எடுத்துள்ளார்கள். அவருக்குப் பதிலாக அக்ஸர் படேலையோ அல்லது முகமது ஷமியையோ எடுத்திருக்கலாம். அவர்கள் இருவரும் விக்கெட் வீழ்த்தும் திறமை பெற்றவர்கள்.” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு அணிக்காக அதிக பவுண்டரிகள்… கிங் கோலி படைத்த புதிய சாதனை!

‘சில நேரங்களில் தோல்வியும் நல்லதுதான்’… ஆர் சி பி கேப்டன் ஜிதேஷ் ஷர்மா!

ஆறுதல் வெற்றியா இருந்தாலும் பரவாயில்ல! ஆர்சிபியை ஆல் அவுட் ஆக்கிய சன்ரைசர்ஸ்!

ரோஹித் சர்மா, கோஹ்லி மட்டுமல்ல, பும்ராவும் இல்லை.. இங்கிலாந்து செல்லும் இந்திய அணியின் கேப்டன் யார்?

ஓய்வு என்பது வீரர்களின் தனிப்பட்ட முடிவு… யாரும் ஒன்றும் செய்ய முடியாது – கம்பீர் விளக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments