Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மலாவி : பிரெடி புயல் தாக்கியதில் 190 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

Webdunia
புதன், 15 மார்ச் 2023 (22:59 IST)
மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள மலாவி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிரெடி புயல் தாக்கியதில் 190 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகிறது.

மேற்கு ஆஸ்திரேலியாவில் கடந்த பிப்ரவரி மாதத்தில் பிரெடி என்றுபெயரிடப்பட்ட புயல் உருவானது. வெப்பமண்டல புயலான இது, கடந்த பிப்ரவரி 21 ஆம் தேதி மடகாஸ்டர் வழியாக, இந்திய பெருங்கடலில் பரவி, பிப்ரவரி 24 ஆம் தேதி மொசாம்பிக்கில் கரைகடந்தது.

இந்தப் புயல், மொசாம்பிக்கில் மீண்டும் கடந்த ஞாயிற்றுக்கிழமை தாக்கியது. இதில், அருகிலுள்ள சிறு நாடான மாலாவியும் பெருமளாவில் பாதிப்பை சந்தித்தது.

புயல் கரையைக் கடந்தபோது, பல்வேறு பகுதிகளில் மண் சரிவுகள் ஏற்பட்டது, அத்துடன் பல வீடுகள் அடித்துச் செல்லப்பட்டதாகவும், அதில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தைகள் முதல் பெரியோர் வரை பலரை அடித்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் புயல் பாதிப்பால், மின்சார விநியோகம் தடைபட்டுள்ளதாகவும், கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாகவும், இதுவரை சுமார் 190 பேர் பலியாகியுள்ளதாகவும், 37 பேரைக் காணவில்லை என்று பேரிடர் விவகார மேலாண்மைத்துறை தெரிவித்துள்ளது.

மீட்புப்பணிகள் துரிதமாக நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் செய்து வருவதாக அந்த நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என் கனவு சரியான நேரத்தில் நிறைவேறியது.. ஆட்டநாயகன் திலக் வர்மா நெகிழ்ச்சி!

மைதானத்துக்குப் படையெடுத்த ஈசல்கள்… என்ன செய்வது எனத் தெரியாமல் போட்டியை நிறுத்திய நடுவர்கள்!

இரண்டே ஆண்டுகளில் பும்ராவை முந்தி சாதனைப் படைத்த அர்ஷ்தீப் சிங்!

தோனி, கோலி, ரோஹித்… என் மகனின் வாழ்கையை வீணடித்து விட்டார்கள்- சஞ்சு சாம்சன் தந்தை கோபம்!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டி20 போட்டி.. இந்தியா த்ரில் வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments