இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையே ஹைதராபாத்தில் முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி நடைபெற்ற நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்திய அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.
இந்த டெஸ்ட் போட்டியில் முழுக்க முழுக்க சுழல்பந்து வீச்சாளர்களின் ஆதிக்கம்தான் கோலோச்சியது. இந்திய அணியில் பும்ரா மட்டுமே சிறப்பாக விளையாடி 6 விக்கெட்களை வீழ்த்தினார். இந்திய அணியின் சிராஜோ அல்லது இங்கிலாந்தின் மார்க் வுட்டோ ஒரு விக்கெட்டோ கூட வீழ்த்தவில்லை. சுழல்பந்து வீச்சுக்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் பூம்ரா தன்னை நிரூபித்து தான் உலகத்தரமான பவுலர் என்பதைக் காட்டினார்.
இதுபற்றி பேசியுள்ள இங்கிலாந்து அணியின் மார்க் வுட் “பும்ரா எனக்கு எந்த விஷயத்தையும் எளிதாக விடவில்லை. நான் விக்கெட் எடுக்காததால் மிகவும் கவலைபட்டேன். ஆனால் எங்கள் அணி வெற்றி பெற்றதால் மகிழ்ச்சியடைந்தேன். இரண்டாவது இன்னிங்ஸில் எல்லாம் எனக்கு பவுலிங்கே கிடைக்காது என நினைத்தேன். ஆனால் அதிர்ஷ்டவசமாக ஒரு ஓவர் கிடைத்தது” எனக் கூறியுள்ளார்.