Webdunia - Bharat's app for daily news and videos

Install App

23 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கை… ஓய்வை அறிவித்த மிதாலி ராஜ்… பிரியாவிடை கொடுக்கும் ரசிகர்கள்

Webdunia
புதன், 8 ஜூன் 2022 (16:05 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீராங்கனையான மிதாலி ராஜ் அனைத்து விதமான சர்வதேச போட்டிகளில் இருந்தும் ஓய்வை அறிவித்துள்ளார்.

கிட்டத்தட்ட 23 ஆண்டுகளாக இந்திய அணிக்காக மிதாலி ராஜ் விளையாடி வரும் நிலையில் சமீபத்தில் நடந்த உலகக்கோப்பையில் இந்திய வழிநடத்தினார். பெண்கள் கிரிக்கெட்டின் சச்சின் என சொல்லத்தக்க அளவுக்கு சாதனைகளைப் படைத்துள்ள அவர் தற்போது அனைத்து வகையிலான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.1999 ஆம் ஆண்டில் இருந்து 23 ஆண்டுகளாக இந்திய அணிக்காக விளையாடியுள்ள அவருக்கு தற்போது வயது 39.

இதுவரை 232 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 50 ரன்கள் சராசரியில் 7805 ரன்கள் சேர்த்துள்ளார். 12 டெஸ்ட் போட்டிகளிலும், 89 டி 20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார். அவரின் பயோபிக் படமான சபாஷ் மிது என்ற பெயரில் டாப்ஸி நடிப்பில் உருவாகி வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓராண்டுக்குப் பிறகு நாளை கிரிக்கெட் களம் காண்கிறார் ஷமி!

சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இருந்து பாகிஸ்தான் விலக முடிவு?

ஆஸ்திரேலிய தொடர்… கோலியின் முகத்தை முன்னிலைப் படுத்தும் ஆஸி ஊடகங்கள்!

சாம்பியன்ஸ் கோப்பை தொடரை நடத்துவதில் இருந்து விலக முடிவு.. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிரடி!

சி எஸ் கே அணி என்னை எடுக்கும் என்று நம்புகிறேன்… வெளிப்படையாகக் கேட்ட தீபக் சஹார்!

அடுத்த கட்டுரையில்
Show comments