Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோனி அடுத்த சீசனில் விளையாட மாட்டார்… முன்னாள் இந்திய வீரர் சொல்லும் காரணம்!

Webdunia
புதன், 17 மே 2023 (09:57 IST)
ஐபிஎல் போட்டிகள் வந்தாலே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் மட்டுமல்ல மற்ற அணி ரசிகர்களுமே தோனியின் சிக்ஸர்களை காண குவிந்து விடுவர். இந்திய அணி ஜாம்பவான் வீரரான தோனி தற்போது ஐபிஎல் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருவதால் அப்படி ஒரு மவுசு.

தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் தோனி இந்த சீசனோடு ஓய்வு பெற உள்ளதாக பேசிக் கொள்ளப்படுகிறது. ஒவ்வொரு சீசனிலும் அப்படி சொல்லப்பட்டாலும் கூட இதுவரை தோனி அவராக அவரது ஓய்வு குறித்து பேசவில்லை. ஆனால் இந்த ஐபிஎல்லில் ஆரம்பம் முதலே ஓய்வு பெறப் போவது போல சில இடங்களில் மறைமுகமாக அவர் பேசியது பரபரப்பை ஏற்படுத்தி வந்தது.

இந்நிலையில் தோனியின் ஓய்வு பற்றி பேசியுள்ள முன்னாள் இந்திய அணி வீரர் முகமது கைஃப் “தோனி அடுத்த சீசனில் விளையாட மாட்டார் என்றே என்னுடைய உள்ளுணர்வு சொல்கிறது. அவர் தன்னுடைய ஓய்வு பற்றி போதுமான அளவுக்கு குறிப்புகளைக் கொடுத்துள்ளார். அவரின்  ஓய்வு பற்றி இப்போது உலகை யோசிக்க வைத்துள்ளார். அதுதான் அவரின் இயல்பு” எனக் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இது நீண்ட உறவின் தொடக்கம்… இளம் வீரர் குறித்து சென்னை அணிப் பயிற்சியாளர் கருத்து!

ஐ பி எல் தொடரில் முதல் ஆளாக அந்த சாதனையைப் படைத்த ரியான் பராக்!

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டி.. டாஸ் வென்ற லக்னோ எடுத்த முடிவு.. ஆடும் லெவனில் யார் யார்?

கடைசி பந்தில் 23 ரன்கள் தேவை.. கொல்கத்தா அணி 1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி

கலீல் அகமது ஓவரில் இப்படி ஆகும் என யாரும் நினைத்து கூட பார்க்கவில்லை: ஸ்டீபன் பிளம்மிங்

அடுத்த கட்டுரையில்
Show comments