Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிரிக்கெட்டில் புதிய விதிமுறைகள் - ஐசிசி அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 20 செப்டம்பர் 2022 (18:11 IST)
உலகில் கால்பந்திற்கு அடுத்து அதிக ரசிகர்களால் கொண்டாடப்படும் விளையாட்டு கிரிக்கெட். இந்த விளையாட்டில் அவ்வப்போது, புதிய மாற்றங்கள், காலத்திற்கேற்ப விதிமுறைகள் அறிமுகம் செய்யப்படுகிறது,

அந்த வகையில்,   ஐசிசி அமைப்பு தற்போது கிரிக்கெட்டில் புதிய விதிமுறைகளை அறிமுகம் செய்துள்ளது.

அதில்.  பந்து பளபளக்க வைக்க பந்தின் மீது எச்சில் பயன்படுத்தி வந்த நிலையில், கொரொனா காலத்தில் இதற்கு கட்டுப்பாடு வந்தது, இந்த நிலையில், இனிமேல் பந்தின் மீது வீரர்கள் எச்சிலை பயன்படுத்தக்கூடாது.

பேட்ஸ் மேங்கள் பந்து வீச்சாளரின் பந்து வீச்சை எதிர்கொள்ளும்போது, அவரது கவனத்தை பீல்டிங் செய்வோர் சிதைத்தால், பேட்டிங்செய்யும் அணிக்கு 5 ரன்கள் நடுவரால் வழங்கப்படும்.

தற்போது வரை ஒரு பேட்ஸ்மேன் கேட்ச் ஆல் அவுட் ஆகினால், எதிர்முனையில் உள்ள பேட்ஸ்மேன் தான் பேட்டிங் செய்வார். இனிமேல், புதிதாக வரும் வீரரே பேட்டிங் செய்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ: டி20 கிரிக்கெட் போட்டியில் புதிய விதி: பிசிசிஐ அறிவிப்பு!

மேலும், பந்து வீச்சாளர் பந்து வீசுகையில்,அங்குள்ள பேட்ஸ்மேன் எல்லைக்கோட்டை தாண்டிச் சென்றால், பந்து வீச்சாளர் மங்கட் முறையில் அவுட் செய்ய இதற்கு முன் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படாத நிலையில், இனிமேல் இம்முறையில் அவுட் செய்தால் அது அவுட்தான்.

இப்புதிய விதிகள் வரும் அக்டோபர் 1 முதல்  நடைமுறைக்கு வரவுள்ளதாகக் கூறப்படுகிறது,

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாதியில் நிறுத்தப்பட்ட பஞ்சாப் - டெல்லி போட்டி மீண்டும் நடத்தப்படுமா? யாருக்கு பலன்?

எங்கள் நாட்டில் ஐபிஎல் போட்டியை நடத்த வாருங்கள்: இங்கிலாந்து அழைப்பு..!

சொந்த நாட்டிற்கு புறப்படத் தொடங்கிய கிரிக்கெட் வீரர்கள்! ஐபிஎல் அவ்வளவுதானா?

பாகிஸ்தான் ப்ரீமியர் லீகா? ஐபிஎல்லா? அரபு அமீரகம் எடுக்கப் போகும் அதிரடி முடிவு!

ஐபிஎல் தொடரை ஒரு வாரத்துக்கு தள்ளிவைக்கிறோம்… பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments