Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜனவரி 23 ஆம் தேதி கேஎல். ராகுல்- அதியா ஷெட்டிக்கு திருமணம்

kl ragul
Webdunia
புதன், 18 ஜனவரி 2023 (18:01 IST)
இந்திய கிரிக்கெட் அணியின்  நட்சத்திர வீரர் கே.எல்.ராகுல்- அதியா ஷெட்டியின் திருமணம் வரும் 23 ஆம் தேதி நடக்கவுள்ளது.

இந்திய கிரிக்கெட்  அணியின் முன்னணி வீரர் கே.எல்.ராகுல். இவர் இதுவரை இந்திய அணிக்காக 43 டெஸ்ட் போட்டிகளிலும், 45 ஒரு  நாள் தொடரிலும், 72 –டி-20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

இவர், பிரபல பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டியின் மகன் அதியா ஷெட்டியை காதலித்து, டேட்டிங்கில் இருப்பதாக தகவல் வெளியான நிலையில், இதை சமீபத்தில் சுனில் ஷெட்டியே உறுதிப்படுத்தினார்.

இந்த  நிலையில், கே.எல். ராகுல் – அதியா ஷெட்டியின் திருமணம் ஜனவரி மாதம் நடைபெறும் என்று  தகவல் வெளியானது.
 

ALSO READ: கே எல் ராகுல் மீது பிசிசிஐ விதிகளின் படி நடவடிக்கை எடுக்கப்படும்! பஞ்சாப் அணி நிர்வாகம் அதிருப்தி!
 
இந்த நிலையில், வரும் 23 ஆம் தேதி  கே.எல். ராகுலுக்கும்  அவரது காதலியும் நடிகையுமான அதியா ஷெட்டிக்கும்  திருமணம் நடக்கவுள்ளது.

பாந்த்ராவின் பாலி ஹில்ஸில் உள்ள ரிலி ராகுலின் இல்லத்தில் இரு குடும்பங்களுடன் இத்திருமண ஏற்பாடுகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. இதற்காக வீட்டில் தொங்கு விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

ரசிகர்கள் இருவருக்கும் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

RCB அணிக்கு மகிழ்ச்சியான செய்தி… அணிக்குள் வரும் முக்கிய வீரர்!

டெஸ்ட் கிரிக்கெட்டில் 13000 ரன்கள்… புதிய மைல்கல்லை எட்டிய ஜோ ரூட்!

இந்தியா Under 19 அணியின் கேப்டன் ஆனார் சிஎஸ்கே வீரர் ஆயுஷ் மாத்ரே.. சூர்யவம்சிக்கும் இடம்..!

நியுசிலாந்து விக்கெட் கீப்பரை மாற்று வீரராக ஒப்பந்தம் செய்த RCB..!

500 மிஸ்ட் கால்கள்… நான் விலகி இருக்க விரும்புகிறேன்- சுட்டிக் குழந்தை சூர்யவன்ஷி!

அடுத்த கட்டுரையில்
Show comments