Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எங்க ஆளுக்கு முன்னாடி உம்ரான் மாலிக் ஒன்னுமே இல்ல… சீண்டும் பாகிஸ்தான் வீரர்!

Webdunia
செவ்வாய், 24 ஜனவரி 2023 (09:09 IST)
உம்ரான் மாலிக்கை பாகிஸ்தானின் ஹாரிஸ் ரவுஃப் உடன் ஒப்பிடுவது சரியாக இருக்காது என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆகிஃப் ஜாவேத் கூறியுள்ளார்.

கடந்த ஆண்டே தனது அதிவேகப் பந்துகளால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் உம்ரான் மாலிக். இந்நிலையில் இந்த ஆண்டு மேலும் மெருகேறி பேட்ஸ்மேன்களை திணறவைத்து வருகிறார்.  இதையடுத்து அவருக்கு இந்திய அணியில் சில போட்டிகள் விளையாட வாய்ப்புக் கிடைத்தது. தற்போது பங்களாதேஷ் அணிக்கான தொடரில் விளையாடி வருகிறார். மணிக்கு 150 கிமீ வேகத்துக்கு மேல் அவர் வீசி வருகிறார்.

இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் பந்துவீச்சாளார் ஆகிஃப் ஜாவேத் ஹாரிஸ் ரவுஃப் உடன் உம்ரான் மாலிக்கை ஒப்பிடவே முடியாது எனக் கூறியுள்ளார். மேலும் “உம்ரான் தொடக்க ஓவர்களில் மட்டுமே 150 கிமீ வேகத்துக்கு மேல் வீசுகிறார். அதன் பின்னர் அவர் 140 கி மீ வேகத்துக்குக் கீழ் குறைத்துக் கொள்கிறார். ஆனால் ஹாரிஸ் ரவுஃப் அனைத்து ஓவர்களின் போதும் 150 கி. மீ வேகத்துக்கு மேல் வீசுகிறார். இருவரையும் ஒப்பிடவே முடியாது” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

PSL தொடரை வேறு நாட்டுக்கு மாற்றிய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்!

‘கண்ணுக்குக் கண் என்றால் உலகமே பார்வையற்றதாகிவிடும்’ –அம்பாத்தி ராயுடுவின் பதிவு!

தரம்ஷாலாவில் இருக்கும் கிரிக்கெட் வீரர்களை அழைத்துவர சிறப்பு ரயில் ஏற்பாடு!

ஐபிஎல் தொடர் ரத்தாகுமா?... பிசிசிஐ துணைத் தலைவர் அளித்த பதில்!

பதற்றமான சூழல். ஐபிஎல் தொடரைத் தள்ளிவைக்க பிசிசிஐ ஆலோசனை!

அடுத்த கட்டுரையில்
Show comments