Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிசிசிஐ அந்த முடிவை எடுக்காவிட்டால் பாகிஸ்தான் உலகக்கோப்பையில் கலந்துகொள்ளாது – பாக் கிரிக்கெட் வாரியம் தடாலடி!

Webdunia
சனி, 13 மே 2023 (15:16 IST)
ஆசிய நாடுகள் பங்கேற்கும் ஆசியக் கோப்பை தொடர் இந்த ஆண்டு ஐக்கிய அரபுகள் அமீரகத்தில் நடந்தது. இதில் இலங்கை அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதையடுத்து அடுத்த ஆண்டு 50 ஓவர் போட்டியாக நடக்கும் எனவும், அது பாகிஸ்தானில் நடக்க இருந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியம் பாகிஸ்தானை விட்டு வேறு நாட்டுக்கு மாற்ற முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இதுபற்றி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தலைவர் நஜம் சேத்தி அதிரடியானக் கருத்து ஒன்றை அறிவித்துள்ளார். அதில் “ பாகிஸ்தானில் நடக்க உள்ள ஆசியக் கோப்பை தொடரில் இந்திய அணியை அனுப்பாமல் இருக்க எந்த காரணமும் இல்லை. இந்திய அணி பாகிஸ்தானுக்கு வராவிட்டால், இந்த ஆண்டு இந்தியாவில் நடக்கும் உலகக்கோப்பை தொடருக்கு பாகிஸ்தான் அணி பங்கேற்காது” எனக் கூறியுள்ளார். இது கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் அவர் நான்கு போட்டிகளை பாகிஸ்தானில் நடத்த சம்மதித்தால், மீதமுள்ள போட்டிகளை பொதுவான இடத்தில் நடத்த பாக். கிரிக்கெட் வாரியம் நடத்த சம்மதித்துள்ளதாக அவர் கூறியுள்ளார். மேலும் இது சம்மந்தமாக பிசிசிஐ யின் முடிவுக்காக காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆஸ்திரேலிய தொடர்… கோலியின் முகத்தை முன்னிலைப் படுத்தும் ஆஸி ஊடகங்கள்!

சாம்பியன்ஸ் கோப்பை தொடரை நடத்துவதில் இருந்து விலக முடிவு.. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிரடி!

சி எஸ் கே அணி என்னை எடுக்கும் என்று நம்புகிறேன்… வெளிப்படையாகக் கேட்ட தீபக் சஹார்!

பாலினத்தை மாற்றிக் கொண்ட முன்னாள் கிரிக்கெட் வீரரின் மகன்…!

கம்பீரை ப்ரஸ் மீட்டில் பேசவே விடக்கூடாது… முன்னாள் இந்திய வீரர் கண்டனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments