Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உஸ்மான் கவாஜாவுக்காக ஹாம்ப்பய்ன் கொண்டாட்டத்தை நிறுத்திய பேட் கம்மின்ஸ்!

Webdunia
செவ்வாய், 18 ஜனவரி 2022 (15:32 IST)
ஆஷஸ் தொடரை 4-0 என்ற கணக்கில் வென்று மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறது ஆஸ்திரேலிய அணி.

தான் கேப்டனாக பொறுப்பேற்ற முதல் தொடரிலேயே வெற்றி பெற்று தனது முத்திரையைப் பதித்துள்ளார் பேட் கம்மின்ஸ். இந்நிலையில் ஐந்தாவது டெஸ்ட் முடிந்தவுடன் கோப்பையைக் கையில் வாங்கிய ஆஸி வீரர்கள் ஷாம்ப்பயன் பாட்டிலை உடைத்து அதைக் கொண்டாட ஆயத்தமாகினர்.

ஆனால் அந்த அணியில் உள்ள உஸ்மான் கவாஜா மது தனது மதத்திற்கு எதிரானது என்பதால் அப்போது மேடையை விட்டு கீழே இறங்கினார். அதைப் பார்த்த பேட் கம்மின்ஸ் அவரை அழைத்தார். ஆனால் சக வீரர்கள் அவர் கீழே செல்ல ஷாம்பைன் தான் காரணம் என்று சொல்ல, ஷாம்ப்பைன் கொண்டாட்டத்தை நிறுத்த சொல்லிய கம்மின்ஸ், கவாஜாவை மேடையேற்றி புகைப்படம் எடுத்துக்கொண்டார். பின்னர் அவர் கீழே இறங்கியதும் மற்ற வீரர்கள் ஷாம்பைனை தெளித்து வெற்றியைக் கொண்டாடினர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதலிடத்தை மிஸ் செய்த பஞ்சாப்.. கடைசி ஓவரில் டெல்லி த்ரில் வெற்றி..!

ஏப்ரல் மாதத் தொடக்கத்திலேயே கோலி முடிவைக் கூறிவிட்டார்… அஜித் அகார்கர் தகவல்!

அனைத்து போட்டிகளிலும் பும்ரா விளையாடுவது சந்தேகம்… அகார்கர் தகவல்!

இந்திய டெஸ்ட் அணிக்கு புதிய கேப்டன் … இங்கிலாந்து தொடருக்கான அணி அறிவிப்பு!

ஒரு அணிக்காக அதிக பவுண்டரிகள்… கிங் கோலி படைத்த புதிய சாதனை!

அடுத்த கட்டுரையில்
Show comments