Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மைதானத்தில் இருந்து பாதியிலேயே வெளியேறிய பொல்லார்ட்!

Webdunia
வெள்ளி, 29 அக்டோபர் 2021 (19:20 IST)
வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் கைரன் பொல்லார்ட் பேட்டிங் செய்துகொண்டிருந்த போது பாதியிலேயே வெளியேறினார்.

டி 20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 12 போட்டிகள் இப்போது நடந்து வருகின்றன. இதில் அதிர்ச்சி அளிக்கும் விதமாக நடப்பு சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ் இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய இரு அணிகளிடமும் தோல்வியை சந்தித்துள்ளது. இதனால் மீதமுள்ள அனைத்துப் போட்டிகளையும் வென்றால் கூட அந்த அணி அரையிறுதிக்கு செல்வதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன.

இதையடுத்து இன்று பங்களாதேஷுக்கு எதிரான போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 142 ரன்கள் சேர்த்தது. மூத்த வீரர்கள் அனைவரும் சொதப்பினர். முக்கியமாக கேப்டன் பொல்லார்ட் 16 பந்துகளில் 8 ரன்கள் சேர்த்திருந்த போது திடீரென மைதானத்தில் இருந்து வெளியேறினார். அதற்கான காரணம் என்னவென்று இப்போது வரை வெளியாகவில்லை.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விக்கெட் கீப்பிங்கில் இரட்டை சதம் அடித்த தோனி… புதிய சாதனை!

எனக்கு எதுக்கு ஆட்டநாயகன் விருது… அதுக்கு தகுதியானவர் அவர்தான் – தோனி ஓபன் டாக்!

தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி.. பொறுமையை சோதித்த ஷிவம் துபே.. தோனி அதிரடியால் சிஎஸ்கே வெற்றி..!

டாஸ் வென்ற தோனி, போட்டியையும் வென்று கொடுப்பாரா? ஆடும் 11 வீரர்களின் விவரங்கள்..!

சன் ரைசர்ஸ் அணி வீரர்கள் தங்கியிருந்த ஓட்டலில் தீ விபத்து.. வீரர்களுக்கு என்ன ஆச்சு?

அடுத்த கட்டுரையில்
Show comments