Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சதம் அடிக்காதது குறித்து வருத்தம் இல்லை… புஜாரா கருத்து!

Webdunia
புதன், 24 நவம்பர் 2021 (11:17 IST)
இந்திய டெஸ்ட் அணியின் தற்போதைய தூண் என வர்ணிக்கப்படும் புஜாரா கடந்த 22 போட்டிகளாக சதம் அடிக்கவில்லை.

இந்திய கிரிக்கெட் அணியின் முதுகெலும்புகளில் ஒருவராக செயல்பட்டு வருபவர் புஜாரா. இதுவரை 90 போட்டிகளில் விளையாடி 18 சதங்களை அடித்துள்ளார். ஆனால் கடந்த 2019 ஆம் ஆண்டுக்குப் பிறகு 22 போட்டிகளாக அவர் சதமே அடிக்கவில்லை. ஆனால் அரைசதங்கள் பல அடித்துள்ளார்.

நாளை நடக்க உள்ள கான்பூர் டெஸ்ட் போட்டியில் இவர் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இந்நிலையில் சதம் அடிக்காதது குறித்து பேசியுள்ள அவர் ‘நான் சதமடிக்கவில்லை என்பது எனக்கும் தெரியும். நான் 80, 90 என ரன்களில் அவுட் ஆகியுள்ளேன். ஆனால் அதை பற்றி கவலைப்படவில்லை. அணியின் ஸ்கோரை உயர்த்துவதிலேயே எனது கவனம் இருக்கும்.

அப்படி விளையாடினால்தான் சதமும் அடிக்க முடியும். எனவே எனது டெக்னிக்கில் எந்த மாற்றமும் இல்லை.  சதம் அடிக்க வேண்டும் என்ற அழுத்தம் இருந்தால், அது நமது பேட்டிங் திறனை பாதிக்கும். ‘ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாண்டிங் கோலிப் பற்றி கவலைப்படவேண்டாம்… அவர் வேலை அதுதான்… கம்பீர் நெத்தியடி பதில்!

சாம்பியன்ஸ் ட்ராபி விளையாட பாகிஸ்தானுக்கு செல்ல முடியாது… ஐசிசியிடம் தெரிவித்த பிசிசிஐ!

ரோஹித் விளையாட வரலைன்னா.. இவங்கதான் விளையாடுவாங்க! - கம்பீர் அதிரடி முடிவு!

இன்று பத்திரிக்கையாளர்களை சந்திக்கிறார் கம்பீர்… முக்கிய அறிவிப்பு வருமா?

இந்திய அணியோடு ஆஸ்திரேலியா செல்லாத ரோஹித் ஷர்மா.. முதல் டெஸ்ட்டில் பங்கேற்பாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments