Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் போட்டாச்சா..? இதோ வந்துட்டேன்! – ஆசியக்கோப்பை இறுதி போட்டியில் மழை!

Webdunia
ஞாயிறு, 17 செப்டம்பர் 2023 (15:17 IST)
ஆசியக்கோப்பையின் இறுதிப்போட்டி இன்று தொடங்கிய நிலையில் எதிர்பார்த்தது போலவே மழை குறுக்கிட்டுள்ளது.



பரபரப்பாக நடந்து வந்த ஆசியக்கோப்பை போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்று நடைபெறும் இறுதி போட்டியில் நடப்பு சேம்பியன் இலங்கையை எதிர்கொள்கிறது இந்தியா. ஆசியக்கோப்பை போட்டிகள் தொடங்கியது முதலாகவே மழை பெரும் பிரச்சினையாக இருந்து வருகிறது.

முன்னதாக இந்திய அணி பாகிஸ்தான், இலங்கை அணிகளோடு மோதியபோதும் மழை காரணமாக போட்டிகள் தடைப்பட்டது. இன்று தற்போது இறுதி போட்டிகள் தொடங்கிய நிலையில் இலங்கை அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.

ஆனால் முதல் பந்தை வீசுவதற்குள்ளேயே மழை குறுக்கிட்டுள்ளது. இதனால் ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மழை நின்று மேட்ச் தொடங்குமா அல்லது நாளை ஒத்தி வைக்கப்படுமா என்ற கவலையோடு ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என்னா திமிறு இருக்கணும்..? டெல்லி கேப்பிட்டல்ஸை புறக்கணிக்கும் ரசிகர்கள்! - இதுதான் காரணம்!

இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்புக்கு பும்ரா தகுதியானவர் –அஸ்வின் சொல்லும் காரணம்!

ஆர் சி பி அணிக்கு மேலும் பின்னடைவு… ரஜத் படிதார் விளையாடுவதில் சிக்கல்!

ஐபிஎல் மீண்டும் தொடங்கும்போது ‘அதெல்லாம்’ இருக்கக் கூடாது – சுனில் கவாஸ்கர் கோரிக்கை!

ப்ரீத்தி ஜிந்தாவை மேக்ஸ்வெலுடன் தொடர்பு படுத்தி பேசிய ரசிகர்! - ப்ரீத்தி ஜிந்தா கொடுத்த பதிலடி!

அடுத்த கட்டுரையில்
Show comments