Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் ஆளும் பாஜக, பிசிசிஐ மேல் ஆதிக்கம் செலுத்துகிறது – ரமீஸ் ராஜா கருத்து!

Webdunia
வியாழன், 12 ஜனவரி 2023 (08:20 IST)
சமீபத்தில் சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் தோல்வியடைந்ததை அடுத்து அந்த அணியின் வாரிய தலைவர் ரமீஸ் ராஜா பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அவரின் பதவிக் காலம் முடியும் முன்பாகவே நடந்த இந்த நீக்கம் கவனத்தை ஈர்த்தது.

இந்நிலையில் பாகிஸ்தானின் லாகூரில் உள்ள கல்லூரி விழா ஒன்றில் பேசிய அவர் ‘இந்தியாவில் ஆளும் பாஜக அரசு இந்திய கிரிக்கெட் வாரியத்தின் மீது ஆதிக்கம் செலுத்துகிறது’ என குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் “பிசிசிஐ யின் ஆதிக்கம் பாகிஸ்தானை முன்னேற விடாது. படிப்படியாக வளர்ந்து வரும் பாகிஸ்தான் போன்ற நாடுகளை ஓரங்கட்ட பார்க்கிறது. அவர்களின் அழுத்தத்துக்கு பணிந்து போகக் கூடாது என நான் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியங்களிடம் கேட்டுக்கொண்டுள்ளேன்” எனப் பேசியுள்ளார். அவரின் இந்த பேச்சு இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் இடையே கவனத்தைப் பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாதியில் நிறுத்தப்பட்ட பஞ்சாப் - டெல்லி போட்டி மீண்டும் நடத்தப்படுமா? யாருக்கு பலன்?

எங்கள் நாட்டில் ஐபிஎல் போட்டியை நடத்த வாருங்கள்: இங்கிலாந்து அழைப்பு..!

சொந்த நாட்டிற்கு புறப்படத் தொடங்கிய கிரிக்கெட் வீரர்கள்! ஐபிஎல் அவ்வளவுதானா?

பாகிஸ்தான் ப்ரீமியர் லீகா? ஐபிஎல்லா? அரபு அமீரகம் எடுக்கப் போகும் அதிரடி முடிவு!

ஐபிஎல் தொடரை ஒரு வாரத்துக்கு தள்ளிவைக்கிறோம்… பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments