Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லி அணியில் இருந்து நான் விலக்கப்பட்டது இதனால்தான்… ரிக்கி பாண்டிங் அளித்த விளக்கம்!

vinoth
சனி, 10 ஆகஸ்ட் 2024 (10:11 IST)
உலகக் கிரிக்கெட்டின் தனித்தன்மை கொண்ட ஆளுமையான ரிக்கி பாண்டிங் தற்போது பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார். ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்கு கடந்த 7 ஆண்டுகளாக அவர் பயிற்சியாளராக பணியாற்றினார். டெல்லி  அணி கடந்த 7 சீசன் களாக சிறப்பாக செயல்பட்ட போதிலும் கோப்பையை வெல்ல முடியவில்லை என்றும் குறிப்பாக கடந்த மூன்று சீசன்களில் பிளே ஆப் சுற்றுக்கு கூட டெல்லி அணியை கொண்டு செல்ல முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் டெல்லி அணியில் இருந்து ரிக்கி பாண்டிங் விலக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் ராகுல் டிராவிட்டை அந்த அணிக்குப் பயிற்சியாளராக நியமிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் டெல்லி அணி பற்றி பேசிய பாண்டிங் “டெல்லி அணியுடன் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம். எப்படியாவது அந்த அணிக்குக் கோப்பை வாங்கிக் கொடுக்கவேண்டும் என ஆசைப்பட்டேன். ஆனால் அது நடக்கவில்லை. ஐபிஎல் போட்டிகள் இல்லாத போதும் அந்த அணி வீரர்களுடன் நேரம் செலவிடும் விதமாக பயிற்சியாளர் வேண்டும் என நிர்வாகம் விரும்பியது. ஆனால் நான் என் குடும்பத்தினருடன் நேரம் செலவிடவேண்டும் என்பதற்காக அதை மறுத்தேன். அதனால் அவர்கள் இந்திய பயிற்சியாளர் ஒருவரை நியமிக்க உள்ளார்கள். மீண்டும் ஐபிஎல் தொடரில் பயிற்சியாளராக செயல்பட விரும்புகிறேன்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

”RCBகிட்ட கப் இல்லைன்னு யார் சொன்னது?” ண்ணோவ்.. சும்மா இருண்ணா! - படிதார் பதிலுக்கு ரசிகர்கள் ரியாக்‌ஷன்!

ஜடேஜாவைக் கேப்டனாக்குங்கள்… இளம் வீரர் வேண்டாம் -அஸ்வின் சொல்லும் காரணம்!

உலகின் பணக்கார விளையாட்டு வீரர்கள்! ரொனால்டோ முதலிடம்! - சொத்து மதிப்பு இவ்வளவு கோடியா?

கோலி ஓய்வு முடிவில் தெளிவாக இருந்தார்… என் கேள்விகளுக்கு தெளிவான பதில் சொன்னார் – மனம் திறந்த ரவி சாஸ்திரி!

ரோ-கோ இல்லாததால் பதற்றம் வேண்டாம்.. சிறிதுகாலத்தில் சரியாகி விடும் –சஞ்சய் மஞ்சரேக்கர் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments