Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தான் போட்டியில் ஷுப்மன் கில் விளையாடுவாரா? கேப்டன் ரோஹித் ஷர்மா சொன்ன பதில்!

Webdunia
சனி, 14 அக்டோபர் 2023 (07:34 IST)
உலகக் கோப்பையின் இந்தியாவின் முதல்  இரண்டு போட்டிகளிலும் டெங்கு காய்ச்சல் காரணமாக ஷுப்மன் கில் பங்கேற்கவில்லை. இந்நிலையில் பாகிஸ்தான் அணிக்கெதிரான போட்டியிலும் அவர் பங்கேற்க மாட்டார் என சொல்லப்படுகிறது.

காய்ச்சல் காரணமாக இந்திய அணியோடு டெல்லி செல்லாத அவர் சென்னையில் இருந்து நேற்று முன்தினம்தான் நேரடியாக அகமதாபாத் சென்றார். அவர் அங்கு சுமார் ஒருமணிநேரம் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். சனிக்கிழமை போட்டிக்கு முன்னர் அவர் தன்னுடைய உடல்தகுதியை நிரூபித்தால் அவர் அந்த போட்டியில் விளையாட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் கில் இன்றைய போட்டியில் விளையாடுவாரா என்ற கேள்விக்கு பத்திரிக்கையாளர் சந்திப்பில் பதிலளித்துள்ளார் கேப்டன் ரோஹித் ஷர்மா. அதில் “99 சதவீதம் அவர் பாகிஸ்தான் போட்டியில் விளையாடுவார். ஆனாலும் பிளேயிங் லெவனை தெரிந்துகொள்ள நீங்கள் நாளை வரை (இன்று) காத்திருக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லுங்கி இங்கிடிக்குப் பதிலாக ஜிம்பாப்வே வீரரை ஒப்பந்தம் செய்த RCB!

டீம் வெற்றிக்கு கேப்டன்தான் காரணம்.. வெளில உட்காந்திருப்பவர் அல்ல! - கம்பீரை தாக்கிய கவாஸ்கர்!

ஆசிய கிரிக்கெட் தொடர்களில் இருந்து வெளியேற பிசிசிஐ முடிவு!

டி 20 போட்டிகளில் கோலியின் மற்றொரு சாதனையை முறியடித்த கே எல் ராகுல்!

உடல் எடையைக் குறைத்து விமர்சனங்களுக்குப் பதிலளித்த சர்பராஸ் கான்!

அடுத்த கட்டுரையில்
Show comments