Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரோஹித் ஷர்மாவுக்கு இனி வாய்ப்புக் கஷ்டம்தான்… முன்னாள் வீரர் சொல்லும் காரணம்!

Webdunia
திங்கள், 19 ஜூன் 2023 (08:21 IST)
நடந்து முடிந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி பரிதாபகரமாக தோற்றது. அதனால் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மாவும், பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டும் கடுமையாக விமர்சிக்கப்படுகிறார்கள். ரோஹித் ஷர்மாவின் டெஸ்ட் கேப்டன்சி கோலி போல ஆக்ரோஷமாக இல்லை என்றும் அவர் வீரர்களிடம் பாசிட்டிவ் எனர்ஜியை கடத்துவதில்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இந்நிலையில் ரோஹித் ஷர்மாவின் டெஸ்ட் எதிர்காலம் குறித்த கேள்விகள் இப்போது எழ தொடங்கிவிட்டன. ஏற்கனவே டி 20 போட்டிகளில் ரோஹித் ஷர்மா கண்டுகொள்ளப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ரோஹித் ஷர்மா பற்றி பேசியுள்ள வர்ணனையாளர் ஆகாஷ் சோப்ரா “ ரோஹித் நல்ல பேட்ஸ்மேன் மற்றும் கேப்டன்தான். ஆனால் அவரின் எதிர்காலம் இப்படியே இருக்காது.  அவருடைய வயது சாதகமாக இல்லை. எனவே தேர்வுக்குழு அவருக்கான மாற்று வீரரை தேர்வு செய்யவேண்டிய சூழலில் உள்ளது. அதனால் இனிமேல் அவருக்கு அனைத்து போட்டிகளிலும் விளையாடும் வாய்ப்பு இருக்குமா என்பதே சந்தேகம்தான்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

11 பந்துகளில் 4 சிக்ஸர்கள்… ஸ்ட்ரைக் ரேட் 282.. கவனம் ஈர்த்த சென்னை அணியின் புதுவரவு உர்வில் படேல் !

இவர்தான் இந்திய டெஸ்ட் அணிக்கு அடுத்த கேப்டனா?... வெளியான தகவல்!

‘அதெல்லாம் இப்போ சொல்றதுக்கில்ல..’ – ஓய்வு குறித்த கேள்விக்கு தோனியின் பதில்!

100 முறை அவுட் இல்லை.. 200 பேர் அவுட்.. நேற்றைய போட்டியில் தல தோனியின் சாதனைகள்..!

ஈடன் கார்டன் மைதானத்தில் ஒலிக்கப்பட்ட தேசிய கீதம்.. ‘ஆபரேசன் சிந்தூர்’ வெற்றிக்கு வாழ்த்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments