Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய அணியில் பிரகாசமான எதிர்காலம் உள்ளது… சிஎஸ்கே வீரரைப் பாராட்டிய வாசிம் அக்ரம்!

Webdunia
வெள்ளி, 2 ஜூன் 2023 (10:35 IST)
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சிறப்பாக விளையாடி வரும் ருத்துராஜ் கெய்க்வாட், விரைவில் இந்திய அணியில் இடம்பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடந்து முடிந்த ஐபிஎல் சீசனில் அவர் 590 ரன்களை அடித்து இந்த சீசனில் அதிக ரன்கள் அடித்த வீரர்களில் ஒருவராக உள்ளார்.

இந்நிலையில் அவரை பற்றி பேசியுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் அவருக்கு இந்திய அணியில் பிரகாசமான வாய்ப்புள்ளதாகக் கூறியுள்ளார். மேலும் ருத்துராஜ் பேசியுள்ள அவர் “ அழுத்தத்தின் கீழ் ருத்துராஜ் சிறப்பாக விளையாடுகிறார். அவரிடம் உள்ள மிகப்பெரிய பலமே அவர் முழு உடல்தகுதியுடன் இருக்கிறார் என்பதுதான்” எனப் பாராட்டியுள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாகவே அவர் ஐபிஎல் மற்றும் விஜய் ஹசாரே போன்ற உள்ளூர் போட்டித் தொடர்களில் சிறப்பாக விளையாடினாலும் இன்னும் அவருக்கு இந்திய அணியில் போதுமான வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்பது தான் நிதர்சனம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நம்பர் 1 க்கும் நம்பர் 10க்கும் மோதல்! இன்று GT vs CSK மோதல்! - ஆறுதல் வெற்றியாவது கிடைக்குமா?

முதலிடத்தை மிஸ் செய்த பஞ்சாப்.. கடைசி ஓவரில் டெல்லி த்ரில் வெற்றி..!

ஏப்ரல் மாதத் தொடக்கத்திலேயே கோலி முடிவைக் கூறிவிட்டார்… அஜித் அகார்கர் தகவல்!

அனைத்து போட்டிகளிலும் பும்ரா விளையாடுவது சந்தேகம்… அகார்கர் தகவல்!

இந்திய டெஸ்ட் அணிக்கு புதிய கேப்டன் … இங்கிலாந்து தொடருக்கான அணி அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments