Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’’இந்திய அணி மகத்தான வெற்றி.’’.. சச்சின் , விராட் கோலி பாராட்டு !!

Webdunia
செவ்வாய், 29 டிசம்பர் 2020 (18:00 IST)
இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான சுற்றுபயண ஆட்டம் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. தற்போது இரண்டாவது டெஸ்டின் இரண்டாவது இன்னிங்க்ஸ் நடந்து வந்த நிலையில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை இந்தியா வென்றுள்ளது.

முதல் இன்னிங்ஸில் விளையாடிய ஆஸ்திரேலியா 195 ரன்கள் எடுத்த நிலையில் அசுரகதியாய் விளையாடிய இந்தியா 326 ரன்களை ஸ்கோர் செய்தது. இந்நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா மூச்சு விடாமல் விளையாடினாலும் க்ரீன் மட்டும் அதிகபட்சமாக 45 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் இந்தியாவின் அசுரகதியான பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் குறைந்த ரன்களிலேயே அவுட் ஆனார்கள். இதனால் ஆஸ்திரேலியா 200 ரன்கள் ஸ்கோர் செய்திருந்தது.

இந்நிலையில் இந்தியாவிற்கு வெற்றி இலக்காக 70 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது. அடுத்ததாக களமிறங்கிய இந்தியாவின் தொடக்க பேட்ஸ்மேன் மயங்க் அகர்வால் 5 ரன்களில் ஆட்டம் இழந்தாலும் நின்று நிதானமாக விளையாடிய சுப்மன் கில், ரஹானே 15 ஓவர்களுக்கு 70 ரன்களை சுருட்டி வெற்றியை ஈட்டினர். இதனால் 4 டெஸ்ட் கொண்ட போட்டியில் 1-1 என இரு அணிகளும் சம நிலையில் உள்ளன.

இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, இந்த வெற்றி ஒட்டுமொத்த அணியின் சிறப்பான முயற்சியாகும். இளம் வீரர்கள் மற்றும் கேப்டன் (தற்காலிக கேப்டன் )
 ரகானே ஆகியோரின் சிறப்பான வெற்றியால் நம்மால் இதைவிட மகிழ்ச்சியாக இருக்க முடியாது, மேலும் முன்னோக்கிச் செல்வோம் எனத் தெரிவித்துள்ளார்.

சச்சின் டெண்டுல்கள், அனுபவ வீரர்களான கோலி, ரோகித் சர்மா, இஷாந்த் சர்மாம், முகமது சமி ஆகியோர் இல்லாமல் இளம் வீஅர்கள் பெற்றுள்ள அற்புதமான சாதனை. முதல் போட்டியில் தோல்வி அடைந்தாலும் இரண்டாவது போட்டியில் வெற்றிபெற்றுள்ளது பாராட்டுகள். இந்திய அணிக்கு வாழ்த்துகள் எனக் கூறியுள்ளார்.

கேப்டம் ரகானே தனது வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றுள்ளதாக பலரும் அவருக்கு  வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாண்டிங் கோலிப் பற்றி கவலைப்படவேண்டாம்… அவர் வேலை அதுதான்… கம்பீர் நெத்தியடி பதில்!

சாம்பியன்ஸ் ட்ராபி விளையாட பாகிஸ்தானுக்கு செல்ல முடியாது… ஐசிசியிடம் தெரிவித்த பிசிசிஐ!

ரோஹித் விளையாட வரலைன்னா.. இவங்கதான் விளையாடுவாங்க! - கம்பீர் அதிரடி முடிவு!

இன்று பத்திரிக்கையாளர்களை சந்திக்கிறார் கம்பீர்… முக்கிய அறிவிப்பு வருமா?

இந்திய அணியோடு ஆஸ்திரேலியா செல்லாத ரோஹித் ஷர்மா.. முதல் டெஸ்ட்டில் பங்கேற்பாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments