Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‘ஸ்டார் என்று நினைத்துக் கொள்ளக் கூடாது’.. 14 வயது இளம் வீரருக்கு சேவாக்கின் அட்வைஸ்!

vinoth
வெள்ளி, 25 ஏப்ரல் 2025 (15:40 IST)
ஐந்த ஐபிஎல் தொடரில் கவனம் ஈர்த்த வீரர்களில் ஒருவர் 14 வயதாகும் வைபவ் சூர்யவன்ஷி. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்ட அவர் லக்னோ அணிக்கு எதிரானப் போட்டியில் களம் இறக்கப்பட்டார்.

அந்த போட்டியில் 14 வயது சூர்யவன்ஷி ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கினார்.  அவர் 20 பந்துகளில் 34 ரன்கள் அடித்தார். இதில் மூன்று சிக்ஸர்களும், இரண்டு பவுண்டரிகளும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல நேற்று நடந்த பெங்களூரு அணிக்கு எதிரானப் போட்டியிலும் அவர் 16 ரன்கள் சேர்த்து அசத்தினார். ஆனால்  அவர் நீண்ட இன்னிங்ஸ்களை ஆடாமல் வெகு விரைவிலேயே அவுட் ஆகிவிடுகிறார்.

இந்நிலையில் அவருக்கு சேவாக் ஒரு அறிவுரையைக் கூறியுள்ளார். அதில் “சூர்யவன்ஷி, நீண்ட காலம் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்ற இலக்கை வைத்துக் கொள்ள வேண்டும். கிரிக்கெட்டில் நன்றாக விளையாடும் போது பாராட்டுகள் வரும். அதுவே மோசமாக விளையாடினால் விமர்சனங்கள் வரும். அதனால் தன்னை ஒரு ஸ்டார் என்று நினைத்துக் கொள்ளாமல் அவர் கிரிக்கெட்டில் கவனம் செலுத்த வேண்டும். விராட் கோலி போல 20 ஆண்டுகள் ஐபிஎல் விளையாட வேண்டும் என்ற பசி அவரிடம் இருக்க வேண்டும். இல்லையென்றால் ஒரு சில போட்டிகளிலேயேக் காணாமல் போகும் வாய்ப்பு உள்ளது.” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு அணிக்காக அதிக பவுண்டரிகள்… கிங் கோலி படைத்த புதிய சாதனை!

‘சில நேரங்களில் தோல்வியும் நல்லதுதான்’… ஆர் சி பி கேப்டன் ஜிதேஷ் ஷர்மா!

ஆறுதல் வெற்றியா இருந்தாலும் பரவாயில்ல! ஆர்சிபியை ஆல் அவுட் ஆக்கிய சன்ரைசர்ஸ்!

ரோஹித் சர்மா, கோஹ்லி மட்டுமல்ல, பும்ராவும் இல்லை.. இங்கிலாந்து செல்லும் இந்திய அணியின் கேப்டன் யார்?

ஓய்வு என்பது வீரர்களின் தனிப்பட்ட முடிவு… யாரும் ஒன்றும் செய்ய முடியாது – கம்பீர் விளக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments