Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவராகிறாரா சேவாக்?

Webdunia
வியாழன், 22 ஜூன் 2023 (14:58 IST)
கடந்த பிப்ரவரி மாதம் ஒரு தனியார் தொலைக்காட்சி நடத்திய ஸ்டிங் ஆபரேஷனில் அப்போதைய பிசிசிஐ தேர்வுக்குழு தலைவர் சேட்டன் சர்மா இந்திய கிரிக்கெட் அணி குறித்து பல சர்ச்சையான கருத்துகளை தெரிவித்தார். அது பிசிசிஐ வட்டாரத்தில் புயலைக் கிளப்பியதால் அவர் பின்னர் ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானார்.

அதன் பின்னர் உருவாக்கப்பட்ட தேர்வுக்குழு இடைக்கால குழுவிக்கு சிவசுந்தர் தாஸ் தலைவராக செயல்பட்டு வருகிறார். விரைவில் இந்த குழு கலைக்கப்பட்டு புதிய தேர்வுக்குழு உருவாக்கப்படும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் புதிய தேர்வுக்குழுவுக்கு தலைவராக முன்னாள் இந்திய அணி வீரர் விரேந்திர சேவாக்குக்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக சொல்லப்படுகிறது. இது சம்மந்தமாக அவரை தலைவர் பொறுப்புக்கு விண்ணப்பிக்க சொல்லி பிசிசிஐ சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாண்டிங் கோலிப் பற்றி கவலைப்படவேண்டாம்… அவர் வேலை அதுதான்… கம்பீர் நெத்தியடி பதில்!

சாம்பியன்ஸ் ட்ராபி விளையாட பாகிஸ்தானுக்கு செல்ல முடியாது… ஐசிசியிடம் தெரிவித்த பிசிசிஐ!

ரோஹித் விளையாட வரலைன்னா.. இவங்கதான் விளையாடுவாங்க! - கம்பீர் அதிரடி முடிவு!

இன்று பத்திரிக்கையாளர்களை சந்திக்கிறார் கம்பீர்… முக்கிய அறிவிப்பு வருமா?

இந்திய அணியோடு ஆஸ்திரேலியா செல்லாத ரோஹித் ஷர்மா.. முதல் டெஸ்ட்டில் பங்கேற்பாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments