Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மைக் டைசனின் மேற்கோளைக் கூறி ஆஸி அணியை கலாய்த்த கங்குலி!

Webdunia
திங்கள், 27 பிப்ரவரி 2023 (10:03 IST)
இந்தியாவுக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளையும் தோற்று, பரிதாபகரமான நிலையில் இருக்கிறது ஆஸ்திரேலிய அணி. இந்நிலையில் இந்தூரில் நடக்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வென்றால்தான் தொடரை இழக்காமல் இருக்க முடியும். இந்நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பல மூத்த வீரர்கள் காயம் காரணமாக விலகியுள்ளதால ஆஸி. அணி மேலும் பலவீனமாகியுள்ளது. இந்நிலையில் குடும்ப சூழல் காரணமாக ஆஸி. அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸும் ஆஸிக்கு திரும்பியுள்ளார். அவரால் மூன்றாவது டெஸ்ட்டில் கலந்துகொள்ள முடியாத சூழல் உருவாகியுள்ளது. இந்தூரில் நடக்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டியை ஸ்டீவ் ஸ்மித் வழிநடத்த உள்ளார்.

இந்நிலையில் ஆஸி. அணியின் நிலையை கடுமையாக கலாய்க்கும் விதமாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி “வாயில் குத்து வாங்கும் வரை ஒவ்வொருக்கும் ஒரு திட்டம் இருக்கும்” என்ற மைக்கேல் ஜாக்சனின் மேற்கோளை சொல்லி, கலாய்த்துள்ளார்.

மேலும் “ஆஸி. அணி முதல் பந்து வீசுவதற்கு முன்பாகவே வாயில் குத்து வாங்கிவிட்டது. இந்த தொடரில் ஆஸி அணி 0-4 என்ற கணக்கோடு தாய்நாடு திரும்பும்” எனக் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளில் ஆடல், பாடல் கொண்டாட்டம் வேண்டாம்! - சுனில் கவாஸ்கர் வேண்டுகோள்!

ஐபிஎல் தொடங்கும் அதே நாளில் பி.எஸ்.எல் போட்டிகளை தொடங்கும் பாகிஸ்தான்! வெளிநாட்டு வீரர்கள் வருவார்களா?

ஓய்வு அறிவிப்புக்கு பின் ஆன்மீகத்தில் நாட்டம் கொண்ட விராத் கோலி..!

பும்ராவுக்கு ஏன் டெஸ்ட் கேப்டன்சி அளிக்கப்பட வேண்டும்? – சுனில் கவாஸ்கர் சொல்லும் காரணம்!

பிசிசிஐ விதித்த கட்டுபாடுகளால்தான் கோலி சீக்கிரம் ஓய்வை அறிவித்தாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments