Publish Date: Thu, 12 Sep 2024 (08:40 IST)
Updated Date: Thu, 12 Sep 2024 (08:43 IST)
10 ஆண்டுகளுக்கு ஒருமுறை கிரிக்கெட்டின் முகமாக ஒரு வீரர் இருப்பார். முந்தைய தலைமுறையில் இருந்து கிரிக்கெட்டின் முகம் இன்னொரு வீரருக்கு மாறும். அப்படி சச்சின் தோனிக்குப் பிறகு உச்சப் புகழோடு உலகளவில் ரசிகர்களைப் பெற்று இருக்கிறார் கோலி.
சமீபத்தில் டி 20 உலகக் கோப்பையை வென்ற அணியில் அவர் இடம்பெற்றிருந்தார். அவர் உலகக் கோப்பையோடு இருக்கும் புகைப்படத்தைப் பகிர, அந்த புகைப்படம் ஆசியாவிலேயே அதிகம் பேரால் லைக் செய்யப்பட்ட புகைப்படம் என்ற சாதனையைப் படைத்தது. மேலும் அந்த டி 20 உலகக் கோப்பையை அமெரிக்காவில் பிரபலப்படுத்த கோலியின் புகைப்படம்தான் அதிகளவில் பயன்படுத்தப்பட்டது.
இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் தற்போது மிகச்சிறப்பாக விளையாடி வருபவரும், கோலியின் சக போட்டியாளருமான ஸ்டீவ் ஸ்மித், கோலி ஒரு ஆஸ்திரேலியனைப் போல கிரிக்கெட்டில் செயல்படுவதாகக் கூறியுள்ளார். அதில் “விராட் கோலியின் சிந்தனை மற்றும் செயல்கள் எல்லாம் ஒரு ஆஸ்திரேலியனைப் போல உள்ளது. அவரிடம் உள்ள போர்குணம் மற்றும் எதையும் எதிர்கொள்ளும் தன்மை ஆகியவை ஒரு ஆஸ்திரேலியனுக்குரியவை” எனக் கூறியுள்ளார்.