Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விராட் கோலியை நான் ஆச்சர்யமாகப் பார்க்கிறேன் – ஸ்டீவ் ஸ்மித் பாராட்டு!

Webdunia
செவ்வாய், 2 ஜூன் 2020 (08:46 IST)
விராட் கோலி ஒருநாள் போட்டிகளில் சேஸிங் செய்யும் விதம் தனக்கு பிரமிப்பைக் கொடுப்பதாக ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

கொரோனா காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக எந்தவொரு கிரிக்கெட் போட்டியும் நடக்காத நிலையில் கிரிக்கெட் ரசிகர்கள் சுவாரஸ்யமின்றி வாழ்ந்த் வருகின்றனர். அதைப் போக்க அவ்வப்போது கிரிக்கெட்டரகள் வீடியோ மூலம் பேசி ரசிகர்கள் மற்றும் சக வீரர்களுடன் உரையாடி வருகின்றனர். இந்நிலையில் தற்போது கிரிக்கெட் விளையாடுபவர்களில் தலைசிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன் என அழைக்கப்படும் ஸ்டிவ் ஸ்மித் இதுபோல ரசிகர்களுடன் உரையாடியுள்ளார்.

அப்போது ஸ்மித்திடம் கோலி குறித்து கேள்வி எழுப்பியபோது ‘விராட் கோலி ஒரு அற்புதமான வீரர். அவருடைய சாதனைகள் ஒவ்வொன்றும் அசாதாரணமவை. அவரைப் பார்த்து நான் பிரமிக்கும் விஷயம், ஒரு நாள் போட்டிகளில் சேஸிங்கின் போது அவர் பேட்டிங் செய்யும் விதம். அவரது சேஸிங் சராசரியை பாருங்கள். அது வியப்பூட்டும் விதமாக இருக்கும்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டி 20 போட்டிகளில் கோலியின் மற்றொரு சாதனையை முறியடித்த கே எல் ராகுல்!

உடல் எடையைக் குறைத்து விமர்சனங்களுக்குப் பதிலளித்த சர்பராஸ் கான்!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு மூன்று அணிகள் தகுதி.. நான்காவது அணி எது?

10 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அபார வெற்றி.. டெல்லி டாப் 4க்கு செல்வதில் சிக்கல்..!

220 ரன்கள் இலக்கு கொடுத்த பஞ்சாப்.. ராஜஸ்தான் இலக்கை எட்டுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments