Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று முதல் சர்வதேசக் கிரிக்கெட்டில் அறிமுகமாகும் ‘ஸ்டாப் கிளாக்’ ரூல்ஸ்!

Webdunia
புதன், 13 டிசம்பர் 2023 (07:11 IST)
டி20, ஒருநாள் கிரிக்கெட் போன்ற லிமிடெட் ஓவர் போட்டிகளில் அணிகள் தங்கள் ஓவர்களை முடிக்க நீண்ட நேரம் எடுத்துக் கொள்வது அடிக்கடி நடந்து வருகிறது. இதனால் போட்டியை நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் முடிக்க முடியாத சூழல் உருவாகிறது. இதுபோன்ற சமயங்களில் அணித் தலைவர் அல்லது மொத்த அணிக்கே அபராதம் விதிப்பது போன்ற நடவடிக்கைகளை ஐசிசி எடுத்து வந்தது.

இந்நிலையில் இதற்கு முடிவு கட்டும் விதமாக ஸ்டாப் கிளாக் முறையை அறிமுகம் செய்ய உள்ளது ஐசிசி. இதன் படி ஒரு ஓவர் முடிந்து அடுத்த ஓவரை 60 வினாடிகளுக்குள் பவுலிங் அணி தொடங்க வேண்டும். அப்படி 2 முறைக்கு மேல் தொடங்காவிட்டால் நடுவரால் எச்சரிக்கைக் கொடுக்கப்படும். எச்சரிக்கைக்குப் பிறகும் மீண்டும் இந்த தவறை செய்தால் பேட்டிங் அணிக்கு கூடுதலாக 5 ரன்கள் வழங்கப்படும்.

இந்த ஸ்டாப் கிளாக் விதி இன்று நடந்துள்ள இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டி 20 போட்டியில் இருந்து அறிமுகமாகிறது. இனிமேல் டி 20 போட்டிகளில் இந்த விதிமுறை தொடர்ந்து பின்பற்றப்படும் என தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என் கனவு சரியான நேரத்தில் நிறைவேறியது.. ஆட்டநாயகன் திலக் வர்மா நெகிழ்ச்சி!

மைதானத்துக்குப் படையெடுத்த ஈசல்கள்… என்ன செய்வது எனத் தெரியாமல் போட்டியை நிறுத்திய நடுவர்கள்!

இரண்டே ஆண்டுகளில் பும்ராவை முந்தி சாதனைப் படைத்த அர்ஷ்தீப் சிங்!

தோனி, கோலி, ரோஹித்… என் மகனின் வாழ்கையை வீணடித்து விட்டார்கள்- சஞ்சு சாம்சன் தந்தை கோபம்!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டி20 போட்டி.. இந்தியா த்ரில் வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments