Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுப்மன் கில்லுக்கு டெங்கு காய்ச்சல்.. இந்திய அணியில் நடக்கும் மாற்றம்! – மாற்று வீரர் யார்?

Webdunia
வெள்ளி, 6 அக்டோபர் 2023 (09:06 IST)
ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தொடங்கி நடந்து வரும் நிலையில் இந்திய வீரர் சுப்மன் கில்லுக்கு டெங்கு காய்ச்சல் உறுதியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



ஐசிசி உலக கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் நேற்று தொடங்கி நடந்து வருகின்றன. 10 அணிகளுக்கு இடையே இந்தியாவில் உள்ள ஒன்பது மைதானங்களில் இந்த போட்டிகள் நடைபெறுகிறது. இதில் எதிர்வரும் அக்டோபர் 8ம் தேதி அன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா -ஆஸ்திரேலியா அணிகள் விளையாட உள்ளன.

இதற்காக அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக சுப்மன் கில் இருந்து வந்தார். இந்நிலையில் தற்போது அவருக்கு டெங்கு காய்ச்சல் உறுதியாகி உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. கடந்த சில சர்வதேச போட்டிகளில் சுப்மன் கில் சிறப்பாக விளையாடி இருந்தார். அதுவும் முக்கியமாக இந்தியா - ஆஸ்திரேலியா ஒரு நாள் தொடரில் ஷுப்மன் கில் சிறப்பான ஆட்டத்தை அளித்தார்.

ஆனால் தற்போது டெங்குவால் அவர் பாதிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு பதிலாக இஷான் கிஷன் அல்லது கேஎல் ராகுல் இருவரில் ஒருவர் ஒப்பனிங் பேட்ஸ்மேனாக தேர்வு செய்யப்படலாம் என்று பேசிக் கொள்ளப்படுகிறது. இதனால் இந்திய அணியின் விளையாட்டில் ஏதேனும் பாதிப்புகள் ஏற்படுமா என்று ரசிகர்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

11 பந்துகளில் 4 சிக்ஸர்கள்… ஸ்ட்ரைக் ரேட் 282.. கவனம் ஈர்த்த சென்னை அணியின் புதுவரவு உர்வில் படேல் !

இவர்தான் இந்திய டெஸ்ட் அணிக்கு அடுத்த கேப்டனா?... வெளியான தகவல்!

‘அதெல்லாம் இப்போ சொல்றதுக்கில்ல..’ – ஓய்வு குறித்த கேள்விக்கு தோனியின் பதில்!

100 முறை அவுட் இல்லை.. 200 பேர் அவுட்.. நேற்றைய போட்டியில் தல தோனியின் சாதனைகள்..!

ஈடன் கார்டன் மைதானத்தில் ஒலிக்கப்பட்ட தேசிய கீதம்.. ‘ஆபரேசன் சிந்தூர்’ வெற்றிக்கு வாழ்த்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments