Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய அணிக்கு பெரிய வீரர்கள் தேவையில்லை… கோலியை மறைமுகமாக சீண்டிய கவாஸ்கர்!

vinoth
திங்கள், 4 மார்ச் 2024 (08:38 IST)
தற்போது இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.  இந்த தொடரில் இந்திய அணியின் முதுகெலும்பாக பார்க்கப்படும் கோலி இடம்பெறவில்லை. அவருக்கு இரண்டாவது குழந்தை பிறந்ததை அடுத்து அவர் இந்த தொடரில் இருந்து விலகினார்.

அவர் இல்லாமல் இந்திய அணி இந்த தொடரை எப்படி எதிர்கொள்ள போகிறது என்ற சந்தேகம் முதலில் ஏற்பட்டது. ஆனால் இளம் வீரர்கள் சிறப்பாக  விளையாடி இன்னும் ஒரு போட்டி மீதமிருக்கும் நிலையிலேயே தொடரை வென்றுள்ளனர்.

இதுபற்றி பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் “மூன்றாண்டுகளுக்கு முன்னர் ஆஸ்திரேலியா தொடரில் இந்திய அணி பெரிய வீரர்கள் இல்லாமல் வென்றது.  அந்த தொடரில் இளம் வீரர்கள் காட்டிய ஆக்ரோஷமும் துடிப்பும் இந்த தொடரிலும் காணப்பட்டது. அதனால்தான் நான் சொல்கிறேன். நமக்கு பெரிய வீரர்கள் தேவையில்லை என்று. எந்த பெரிய வீரராவது தான் இல்லாமல் அணி வெற்றி பெறாது என நினைத்தால் அவருக்கு நான் சொல்லிக் கொள்கிறேன் ‘கிரிக்கெட் என்பது குழு விளையாட்டு’. கிரிக்கெட் எப்போதும் குழு விளையாட்டு” எனக் கூறியுள்ளார். பெரிய வீரர் என்று அவர் பொதுவாக சொன்னாலும் பெயர் குறிப்பிடாமல் கோலியைதான் தாக்கியுள்ளார் என்பது கிரிக்கெட் ரசிகர்களுக்கு எளிதாக புரியும் ஒன்றுதான்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குல்தீப், அஸ்வின் அபார பந்துவீச்சு.!! 218 ரன்களுக்கு சுருண்டது இங்கிலாந்து அணி..!

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறாரா தினேஷ் கார்த்திக்?

5 விக்கெட்டுக்களை இழந்தது இங்கிலாந்து.. இந்திய பந்துவீச்சாளர்கள் அபாரம்..!

தொடங்கியது தரம்சாலா டெஸ்ட்… டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் – இந்திய அணியில் நடந்த மாற்றம்!

சி எஸ் கே அணியில் மேலும் ஒரு விக்கெட் காலியா? இளம் வீரரின் காயத்தால் சிக்கல்!

அடுத்த கட்டுரையில்
Show comments