Webdunia - Bharat's app for daily news and videos

Install App

''என் கண்களில் வந்துவிட்டது''- கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா

Webdunia
திங்கள், 25 செப்டம்பர் 2023 (20:05 IST)
ஆசிய விளையாட்டுப் போட்டி சீனாவில் நடைபெற்று வரும் நிலையில் இந்த போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிகள் மோதிய நிலையில் இந்திய  மகளிர் அணி வெற்றி பெற்று தங்கம் வென்று உள்ளது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி  20 ஓவர்களில்  ஏழு விக்கெட் இழப்பிற்கு 116 ரன்கள் எடுத்தது.

இந்த நிலையில் 117 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி இலங்கை மகளிர் அணி விளையாடி நிலையில் 20 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 97 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனை அடுத்து 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு தங்கம் கிடைத்துள்ளது.

ஆசிய விளையாட்டுப் போட்டி சீனாவில் நடைபெற்று வரும் நிலையில்  இன்று   நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில்  இந்திய அணி வெற்றி பெற்று தங்கம் வென்றது. இதுபற்றி, ஸ்மிருதி மந்தனா,’’நாங்கள் வென்று தேசிய கீதம் பாடி, தேசிய கொடி ஏற்றப்பட்டபோது, என் கண்களில் கண்ணீர் வந்துவிட்டது’’ என்று தெரிவித்துள்ளார்.

 
இதுகுறித்து இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

ஆசிய விளையாட்டு மகளிர் கிரிக்கெட்டில் தங்கம் வென்றது மிகவும் ஸ்பெஷலானது நீரஜ் சோப்ரா தங்கம் வென்றபோது  அதை நான் தொலைக்காட்சியில் பார்த்தேன். இன்று போட்டியில் நாங்கள் வென்று தேசிய கீதம் பாடி, தேசிய கொடி ஏற்றப்பட்டபோது, என் கண்களில் கண்ணீர் வந்துவிட்டது என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பண்ட் முகத்தில் சிரிப்பு இல்லை… ஏதோ ஒன்று மிஸ் ஆகிறது- கில்கிறிஸ்ட் கருத்து!

மூன்றாவது அணியாக நடையைக் கட்டிய சன் ரைசர்ஸ் ஐதராபாத்… ப்ளே ஆஃப் கனவைக் குலைத்த மழை!

ப்ளே ஆப் வாய்ப்பை உறுதி செய்யப்போவது யார்? இன்று MI vs GT மோதல்!

ஷமிக்கு வந்த மிரட்டல் மின்னஞ்சல்… அதில் இருந்தது என்ன?- காவல்துறையில் புகார்!

ரிஷப் பண்ட் உடனடியாக இதை செய்யவேண்டும்… சேவாக் அட்வைஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments