Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்மைலு ஸ்மைலுதான்.. இது சூப்பர் ஸ்மைலுதான்..! – கோலி செஞ்சுரிக்காக வெயிட் பண்ணிய அம்பயர்!

Webdunia
வெள்ளி, 20 அக்டோபர் 2023 (11:11 IST)
நேற்றைய உலக கோப்பை போட்டியில் கோலி சதம் அடித்த நிலையில் அம்பயராக இருந்த ரிச்சர்ட் கெட்டில்பரோவின் புகைப்படம் வைரலாகி வருகிறது.



ஐசிசி உலகக்கோப்பை போட்டிகள் இந்தியாவில் பரபரப்பாக நடந்து வருகிறது. இதில் நேற்றைய போட்டியில் வங்கதேச அணியும் இந்திய அணியும் மோதிக் கொண்டன. டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த வங்கதேச அணி 50 ஓவர்கள் முடிவில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 256 ரன்களை பெற்றிருந்தது.

அடுத்ததாகக் களமிறங்கிய இந்திய அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ரோஹித் ஷர்மா கிட்டத்தட்ட அரை சதத்தை (48) நெருங்கி இருந்த நிலையில் அவுட் ஆனார். சுப்மன் கில் 53 ரன்களை குவித்து பின்னர் விக்கெட்டை இழந்தார். கடைசிவரை நின்று விளையாடிய விராட் கோலி வின்னிங் ஷாட்டாக சிக்ஸர் அடித்து ஒரு சதத்தை பூர்த்தி செய்ததுடன் இந்திய அணியையும் வெற்றி பெற செய்தார்.

விராட் கோலிக்கு சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இது 48வது சதம் ஆகும். இந்த சதத்தை விராட் கோலி பெற கூடாது என்பதற்காக கடைசி இரண்டு ரன்கள் தேவைப்பட்ட சமயத்தில் வங்கதேச அணி வைட் பாலை வீசியது. கோலியின் சிக்ஸர்க்காகவும் அவருடைய செஞ்சுரிக்காகவும் காத்திருந்த ரசிகர்களுக்கு இது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஆனால் மைதானத்தில் அம்பயராக நின்று கொண்டிருந்த ரிச்சர்ட் கெட்டில்பரோ இந்த வைட் செல்லாது என்று அறிவித்துவிட்டார். இதனால் பவுலர் அதிர்ச்சியாக ரிச்சர்டை பார்க்க அவரோ ஒரு குறும்புத்தனமான புன்னகையை வீசிச் சென்றார். அடுத்த பந்திலேயே விராட் கோலி சிக்ஸர் அடித்து தனது 48 ஆவது சதத்தை பூர்த்தி செய்தார். அம்பர் ரிச்சர்ட் கெட்டில்பரோ சிரித்த அந்த சிரிப்பு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேச அணிக்கு 515 ரன்கள் இலக்கு..! வெற்றியை நோக்கி இந்தியா.!!

ரிஷப் பண்ட் சதம், சதத்தை நெருங்கும் சுப்மன் கில்.. சென்னை டெஸ்ட் ஸ்கோர் விபர்ம்..!

ஒன்றும் தெரியாமல் ரயிலேறி சென்னைக்கு வந்தேன்… 50 ஆண்டுகள் ஆகப்போகிறது- ரஜினி நெகிழ்ச்சி!

நேற்றைய இன்னிங்ஸில் கபில்தேவ்வின் சாதனையை முறியடித்த பும்ரா!

சதத்தை நோக்கி கில் & பண்ட்… இரண்டாவது இன்னிங்ஸில் வலுவான நிலையில் இந்தியா!

அடுத்த கட்டுரையில்
Show comments