Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐசிசி தரவரிசையில் பல இடங்கள் முன்னேறிய திலக் வர்மா!

vinoth
வியாழன், 30 ஜனவரி 2025 (07:02 IST)
ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக சிறப்பாக விளையாடி கவனம் பெற்ற திலக் வர்மா, அதன் பின்னர் வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான டி 20 போட்டியில் அறிமுகமாகி சிறப்பான பங்களிப்பைக் கொடுத்தார்.அதன் பின்னர் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அவர் தொடர்ந்து டி 20 போட்டிகளில் கோலி போலவே மிகச்சிறப்பாக ஆடிவருகிறார்.

சென்னையில் நடந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் தனியாளாக விளையாடி இந்திய அணியைக் கடைசி ஓவரில் வெற்றி பெறவைத்தார். டி 20 போட்டிகளில் நான்கு இன்னிங்ஸ்களாக அவர் தனது விக்கெட்டை இழக்காமலேயே விளையாடி வந்தார். ராஜ்கோட்டில் நடந்த போட்டியில்தான் அவர் தன்னுடைய விக்கெட்டை 18 ரன்களில் இழந்தார். இதன்மூலம் தொடர்ச்சியாக 336 ரன்கள் சேர்த்தபின்னர் தன்னுடைய விக்கெட்டை அவர் இழந்துள்ளார்.

இது டி 20 போட்டிகளில் ஒரு வீரர் தொடர்ச்சியாக விக்கெட் இழக்காமல் சேர்த்த அதிகபட்ச ரன்களாகும். இத்தகைய சிறப்பான இன்னிங்ஸ்கள் மூலமாக திலக் வர்மா தற்போது டி 20 போட்டிகளுக்கான தரவரிசையில் இரண்டாம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். முதல் இடத்தில் ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் இடம்பிடித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கேப்டன் சஞ்சு சாம்சன் அவுட்.. பெங்களூருக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் வெற்றி பெறுமா?

அவர்கள் போட்டியை முடித்ததை நினைத்தால் எனக்கு இன்னமும் சிரிப்பு வருகிறது –ஸ்ரேயாஸ் ஐயர்!

மேக்ஸ்வெல்லின் செயலால் கடுப்பான ஸ்ரேயாஸ் ஐயர்…!

வாரி வழங்கும் வள்ளல் ஆன ஷமி… நேற்றையப் போட்டியில் படைத்த மோசமான சாதனை!

தோனி, அஸ்வினின் மூளை வேலை செய்வது நின்று விட்டதா?... கடுமையாக விமர்சித்த மனோஜ் திவாரி!

அடுத்த கட்டுரையில்
Show comments