Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பீல்டிங்கில் ஹர்திக் பாண்ட்யா செய்த மிகப்பெரிய தவறு: நோபால் கொடுத்த அம்பயர்..!

Advertiesment
ஐபிஎல்

Siva

, வியாழன், 22 மே 2025 (08:00 IST)
நேற்றைய டெல்லி மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே நடந்த ஐபிஎல் போட்டியில், பில்டிங்கை சரியாக செட் செய்யாத மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா செய்த தவறால், அம்பையர் நோ பால் கொடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
நேற்றைய போட்டியில் ஐந்தாவது ஓவரின் மூன்றாவது பந்தை மும்பை அணியின் ஜாக்ஸ் வீசியபோது, ஹர்திக் பாண்டியா பில்டிங்கில் ஒரு பெரிய தவறு செய்தார். அதை அம்பையர்கள் உடனே கவனித்தனர். அதாவது, பௌலிங் போடும்போது லெப்ட் சைடில் 6 பீல்டர்கள் இருந்தனர்.
 
கிரிக்கெட்டின் விதிப்படி, லெப்ட் சைடில் அதிகபட்சம் ஐந்து பீல்டர்களே இருக்க வேண்டும் என்பது ஒரு முக்கிய விதி. ஆனால், இந்த விதியை மீறிய காரணத்தினால், அம்பையர் நோ பால் கொடுத்தார். அந்த நோ பாலைச் சந்தித்த டெல்லி அணியின் விப்ராஜ் அதை சிக்ஸராக மாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
விதிகளின்படி, ஒரு அணிக்கு லெப்ட் சைடில் ஐந்து பீல்டர்களை மீறி வைத்திருக்க அனுமதி இல்லை. மேலும், விக்கெட்டுக்கு பின்னால், பாபின் கிரேசிங்கிற்குப் பின்னால் அதிகபட்சம் இரண்டு பீல்டர்களே இருக்கலாம். இந்த விதிமுறையை மீறியதற்காகத்தான் அம்பையர் நோ பால் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நோ பால் காரணமாக, டெல்லி அணிக்கு ஒரு பிரிஹிட் கிடைத்தது. அதை விப்ராஜ்  சிக்ஸராக மாற்றினார். அதன் பிறகு வந்த இரண்டு பந்துகளும் குறிப்பிடத்தக்கவை.
 
இருப்பினும், மும்பை அணிக்கு இந்த நோ பால் மற்றும் சிக்ஸர் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. ஏனெனில், அந்த அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் போட்டியில் வெற்றி பெற்று, அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நான்காவது அணியாக ப்ளே ஆஃப்க்கு சென்ற மும்பை இந்தியன்ஸ்!