இந்திய அணி ஆஸ்திரேலியாவில் இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ள உலகக்கோப்பை தொடருக்காக தயாராகி வருகிறது.
உலக கோப்பை கிரிக்கெட் டி20 கிரிக்கெட் போட்டி அக்டோபர் 16ஆம் தேதி தொடங்க உள்ளது என்பதும் இந்த தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்ட போது அதில் பும்ரா இருந்தார் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது பும்ராவுக்கு முதுகில் காயம் ஏற்பட்டதாகவும் இதன் காரணமாக ஆறு மாதங்கள் வரை அவர் விளையாட முடியாது என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் தற்போது பூம்ரா உலகக்கோப்பையில் விளையாட மாட்டார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அவருக்கு பதிலாக முகமது ஷமி அணியில் இணைந்துள்ளார். அவர் கடந்த ஒரு ஆண்டாக சர்வதேச அளவில் டி20 போட்டிகளில் விளையாடவில்லை.
இந்நிலையில் மூன்று சுழல் பந்து வீச்சாளர்களோடு உலகக்கோப்பைக்கு சென்றுள்ள இந்திய அணி குறித்து முன்னாள் பந்துவீச்சு சுழல்பந்து வீச்சாளர் பரத் அருண் கருத்து தெரிவித்துள்ளார். அதில் “மூன்று சுழல் பந்துவீச்சாளர்கள் அதிகம்தான். ஏனென்றால் ஆஸ்திரேலிய மைதானங்கள் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமானவை. உம்ரான் மாலிக் ஒரு சிறந்த தேர்வாக இருந்திருப்பார் என்று நான் நினைக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.