Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒருநாள் போட்டிகளில் 45 ஆவது சதம்... ரன்மெஷின் கோலியின் அடுத்த சாதனை

Webdunia
செவ்வாய், 10 ஜனவரி 2023 (16:57 IST)
இந்திய அணியின் மூத்த வீரர் கோலி, தன்னுடைய 44 ஆவது சதத்தை அடித்து மைல்கல்லை எட்டியுள்ளார்.

இந்தியா மாற்றம் இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கு இடையே இன்று முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மதியம் 1.30 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் ரோஹித் ஷர்மா மற்றும் கில் ஆகிய இருவரும் அதிரடியாக விளையாடி ரன்களைக் குவித்தனர்.

ரோஹித் ஷர்மா 83 ரன்களும், கில் 70 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்க, அடுத்து இறங்கிய கோலி சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். ஸ்ரேயாஸ் ஐயர் 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

இந்நிலையில் மூன்றாவது இறங்கிய இந்திய அணியின் ரன் மெஷின் விராட் கோலி, அதிரடியாக விளையாடி சதமடித்தார். இது ஒரு நாள் போட்டிகளில் அவரின் 45 ஆவது சதமாகும். இந்தியாவில் அவர் அடித்த 20 ஆவது சதமாகும். இதன் மூலம் இந்தியாவில் அதிக சதம் அடித்த வீரர் என்ற சச்சினின் சாதனையை சமன் செய்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாண்டிங் கோலிப் பற்றி கவலைப்படவேண்டாம்… அவர் வேலை அதுதான்… கம்பீர் நெத்தியடி பதில்!

சாம்பியன்ஸ் ட்ராபி விளையாட பாகிஸ்தானுக்கு செல்ல முடியாது… ஐசிசியிடம் தெரிவித்த பிசிசிஐ!

ரோஹித் விளையாட வரலைன்னா.. இவங்கதான் விளையாடுவாங்க! - கம்பீர் அதிரடி முடிவு!

இன்று பத்திரிக்கையாளர்களை சந்திக்கிறார் கம்பீர்… முக்கிய அறிவிப்பு வருமா?

இந்திய அணியோடு ஆஸ்திரேலியா செல்லாத ரோஹித் ஷர்மா.. முதல் டெஸ்ட்டில் பங்கேற்பாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments