Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோலி ஒரு பீஸ்ட்… புகழ்ந்த பாகிஸ்தான் முன்னாள் வீரர்!

Webdunia
புதன், 26 அக்டோபர் 2022 (10:13 IST)
பாகிஸ்தான் அணிக்கு எதிரான இந்திய அணியின் வீரர் விராட் கோலியின் இன்னிங்ஸை சோயிப் மாலிக் பாராட்டியுள்ளார்.

பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, தான் ஒரு மாஸ்டர் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துவிட்டார்.  31 ரன்களுக்கு 4 ரன்களை இழந்து தடுமாறிய இந்திய அணியை கட்டிக்காத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் வெற்றியை வசப்படுத்தினார் கோலி.

அவர் 53 பந்துகளில் 82 ரன்கள் சேர்த்த இன்னிங்ஸில் 6 பவுண்டரிகளு 4 சிக்ஸர்களும் அடக்கம். அவரின் வாழ்நாள் சிறந்த இன்னிங்ஸை விளையாடியுள்ள கோலியை கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் முன்னாள்  வீரர்கள் என அனைவரும் அவரைப் பாராட்டி தீபாவளிக்கு முந்தைய நாளே இந்தியாவில் தீபாவளி தொடங்கி பலரும் வெற்றியைக் கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.

இதுபற்றி ட்வீட் செய்துள்ள பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சோயிப் மாலிக் “வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் கோலியை விட சிறந்த வீரரை நாம் காணமுடியாது. அவர் ஒரு பீஸ்ட். அவரால் நிலைத்து நின்று ஆடவும் முடியும், சிக்ஸர்கள் விளாசி இன்னிங்ஸை முடிக்கவும் முடியும்” எனக் கூறியுள்ளார். 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்குவது எப்போது? மத்திய அரசுடன் ஆலோசனை..!

பாதியில் நிறுத்தப்பட்ட பஞ்சாப் - டெல்லி போட்டி மீண்டும் நடத்தப்படுமா? யாருக்கு பலன்?

எங்கள் நாட்டில் ஐபிஎல் போட்டியை நடத்த வாருங்கள்: இங்கிலாந்து அழைப்பு..!

சொந்த நாட்டிற்கு புறப்படத் தொடங்கிய கிரிக்கெட் வீரர்கள்! ஐபிஎல் அவ்வளவுதானா?

பாகிஸ்தான் ப்ரீமியர் லீகா? ஐபிஎல்லா? அரபு அமீரகம் எடுக்கப் போகும் அதிரடி முடிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments