Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடைசி நேர சொதப்பல்… இந்திய அணியுடன் அமெரிக்கா செல்லாத கோலி… என்ன காரணம்?

vinoth
திங்கள், 27 மே 2024 (07:34 IST)
ஜூன் 1 ஆம் தேதி தொடங்கவுள்ள டி 20 உலகக் கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அந்த அணியில் ரசிகர்கள் எதிர்பார்த்த சில பெயர்கள் இடம்பெறவில்லை. அதில் மிக முக்கியமானதாக சமீபகாலமாக டி 20 போட்டிகளில் கலக்கி வரும் ரிங்கு சிங் பெயர் இடம்பெறாததுதான். அதே போல அணியில் நான்கு சுழல் பந்து வீச்சாளர்கள் இடம்பெற்றிருந்தார்கள். அதுவும் தேவையில்லாதது என சொல்லப்பட்டது. இப்படி அந்த அணி மீது சில விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்த தொடரில் இந்திய அணிக்கான போட்டி ஜூன் 5 ஆம் தேதி தொடங்க உள்ளது. இதற்காக இந்திய அணி ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு முன்பாகவே அமெரிக்கா செல்கிறது. ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்த அணியில் தற்போது ஐபிஎல் ப்ளே ஆஃப் சுற்றில் இருக்கும் வீரர்கள் மட்டும் செல்ல மாட்டார்கள்.

இந்திய அணியோடு செல்லவிருந்த கோலி, கடைசி கட்டத்தில் செல்லவில்லை. இதற்கு அவரின் விசாவுக்கான வேலைகள் இன்னும் நிறைவடையாததே காரணம் என சொல்லப்படுகிறது. அதனால் அவர் விரைவில் அமெரிக்கா சென்று இந்திய அணியோடு இணைவார் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோஹித் விளையாட வரலைன்னா.. இவங்கதான் விளையாடுவாங்க! - கம்பீர் அதிரடி முடிவு!

இன்று பத்திரிக்கையாளர்களை சந்திக்கிறார் கம்பீர்… முக்கிய அறிவிப்பு வருமா?

இந்திய அணியோடு ஆஸ்திரேலியா செல்லாத ரோஹித் ஷர்மா.. முதல் டெஸ்ட்டில் பங்கேற்பாரா?

2வது டி20 கிரிக்கெட்: வருண் சக்கரவர்த்தி அபாரமாக பந்து வீசியும் இந்தியா தோல்வி..

AUS vs PAK ODI: சொந்த மண்ணிலேயே வீழ்ச்சி அடைந்த ஆஸ்திரேலியா! - 22 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் சாதனை!

அடுத்த கட்டுரையில்
Show comments