இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது. இதற்கான் விதிமுறைகளை வெளியிட்டுள்ளது ஐசிசி.
வரும் ஜூன் 18 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதிவரை இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடை உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது.
இதற்காக இவ்விரு அணிகளும் தீவிரமாகப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கோலி தலைமையிலான இந்திய அணியினர் தற்போது மும்பையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். எனவே இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய இரு அணிகளள் பங்கேற்கும் இறுதிப் போட்டிக்கான விதிமுறைகளை ஐசிசி வெளியிட்டுள்ளது.
இதில்,
-
5 நாள் நடைபெறும் போட்டியில் ஒவ்வொரு நாளும் 90 ஓவர்கள் வீசப்படும்.
-
திடீரென்று மழை வந்தால் மீதமுள்ள ஓவர்கள் ரிசர்வ் டே –நாளான 6 ஆம் நாள் வீசப்படும்.
-
எதேனும் ஒருநாள் ஆட்டம் பாதிக்கப்பட்டால் அது ரிசர்வ் டேஅன்று நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
நடுவர்களின் முடிவை கேட்டுவிட்டு அதன்பின்ன்பு, டிஆர் எஸ் முறையில் மேல்முறையீடு செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.