Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரையிறுதிக்குள் நுழையப்போகும் நான்காவது அணி எது? மும்முனைப் போட்டி!

Webdunia
புதன், 8 நவம்பர் 2023 (07:14 IST)
நேற்று நடந்த ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் ஆஸ்திரேலியா அணி அரையிறுதிக்குள் மூன்றாவது அணியாக நுழைந்துள்ளது. ஏற்கனவே இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் அரையிறுதிக்கு நுழைந்துவிட்டன.

இந்நிலையில் நான்காவது அணியாக உள்ளே செல்ல பாகிஸ்தான், நியுசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளுக்கு இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. இதில் நியுசிலாந்து அணி இலங்கையோடு கடைசி போட்டியில் மோத உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் அந்த அணி நேரடியாக அரையிறுதிக்கு செல்லும்.

பாகிஸ்தான் அணி கடைசி போட்டியாக இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. பாகிஸ்தான் அணி அதிக ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்த வேண்டும். அப்போதுதான் நியுசிலாந்தை தாண்டி அதிக ரன்ரேட் புள்ளிகள் கிடைக்கும்.

அதேபோல ஆப்கானிஸ்தான் அணி கடைசி போட்டியில் வலிமை மிக்க தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. அந்த அணியும் மிகப்பெரிய மார்ஜினில் வெல்லவேண்டும். இதனால் உலகக் கோப்பையின் அடுத்தடுத்து வரும் போட்டிகள் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாதியில் நிறுத்தப்பட்ட பஞ்சாப் - டெல்லி போட்டி மீண்டும் நடத்தப்படுமா? யாருக்கு பலன்?

எங்கள் நாட்டில் ஐபிஎல் போட்டியை நடத்த வாருங்கள்: இங்கிலாந்து அழைப்பு..!

சொந்த நாட்டிற்கு புறப்படத் தொடங்கிய கிரிக்கெட் வீரர்கள்! ஐபிஎல் அவ்வளவுதானா?

பாகிஸ்தான் ப்ரீமியர் லீகா? ஐபிஎல்லா? அரபு அமீரகம் எடுக்கப் போகும் அதிரடி முடிவு!

ஐபிஎல் தொடரை ஒரு வாரத்துக்கு தள்ளிவைக்கிறோம்… பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments