Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அவமானத்தின் விளிம்பில் இருக்கிறோம் – டூ பிளஸ்சி வேதனை !

Webdunia
திங்கள், 24 ஜூன் 2019 (12:45 IST)
தென் ஆப்பிரிக்கா அணி நேற்று பாகிஸ்தானோடு அடைந்த தோல்வியின் மூலம் லீக் போட்டிகளோடு வெளியேறுகிறது.

தென் ஆப்பிரிக்கா அணி உலகக்கோப்பை போன்ற சர்வதேசத் தொடர்களில் வழக்கமாக நாக் அவுட் சுற்றுகளில்தான் சொதப்பும். ஆனால் இந்த முறை லீக் போட்டிகளிலேயே ஹாட்ரிக் தோல்வி அடைந்து மிக மோசமான நிலையில் உள்ளது. இதுவரை விளையாடியுள்ள 5 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றியும் 5 போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளது. ஒருப் போட்டி மழையால் கைவிடப்பட்டுள்ளது. இந்த தோல்விகளின் மூலம் 2003 ஆம் ஆண்டுக்குப் பிறகு உலகக்கோப்பையில் லீக் சுற்றோடு வெளியேறுகிறது.

நேற்று பாகிஸ்தான் அணிக்கெதிரானத் தோல்விக்குப் பிறகு பேசிய கேப்டன் டுப்ளஸ்சி ‘நாங்கள் பொறுப்போடு விளையாடவில்லை என்பதை இந்த தோல்விகள் வெளிக்காட்டுகின்றன. மோசமான பந்துவீச்சு மற்றும்  மோசமான பேட்டிங்கை நாங்கள் வெளிப்படுத்தினோம். தென் ஆப்பிரிக்கா அணி இதுபோல் லீக் சுற்றுகளோடு வெளியேறுவது அவமானகரமாக உள்ளது. மக்கள் எங்களை விமர்சிக்க முழுத் தகுதியுடையவர்களாவர். எங்கள் வீரர்கள் அனைவரும் நம்பிக்கை இழந்து காணப்படுகிறார்கள். கடினமாக உழைக்கிறார்கள் ஆனால் அடுத்த போட்டி என்று வரும் போது செய்த தவறையே மீண்டும் செய்கின்றனர்’ எனத் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை அணியைப் பாருங்க.. அதுதான் வீரர்களுக்கு வேண்டும் – லக்னோ அணி உரிமையாளரை சீண்டிய ராகுல்!

நானும் கோலியும் அந்த போட்டியில் செய்த தவறு குறித்து இன்னமும் பேசிக்கொண்டிருக்கிறோம்- மனம் திறந்த ராகுல்!

‘ஏன் அவரு இவ்ளோ கோபப்படுறாரு?.. நான் சொன்னத கோலியே ஒத்துப்பாரு’- சாந்தமாக பதில் கொடுத்த பாண்டிங்!

டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பவுலிங் பயிற்சியாளராக முன்னாள் இந்திய வீரர்!

சுதந்திரமாக விளையாடும் அணியே தேவை.. LSG அணிக்குப் பதிலடி கொடுத்த கே எல் ராகுல்!

அடுத்த கட்டுரையில்
Show comments