Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தென்னாப்பிரிக்காவுக்கு ஆறுதல் வெற்றி! இலங்கையை வீழ்த்தியது

Webdunia
வெள்ளி, 28 ஜூன் 2019 (22:02 IST)
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் 35வது லீக் போட்டி இன்று இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இதில் தென்னாப்பிரிக்கா அணி அசத்தல் வெற்றி பெற்றது
 
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 203 ரன்கள் மட்டுமே எடுத்தது. பெரரே, பெர்னாண்டோ தலா 30 ரன்களும், டிசில்வா 24 ரன்களும், மெண்டிஸ் 23 ரன்களும் எடுத்தனர். தென்னாப்பிரிக்காவின் மோரிஸ், பிரெடோரிஸ் தலா மூன்று விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
 
இந்த நிலையில் 204 என்ற எளிய இலக்கை நோக்கி விளையாடிய தென்னாப்பிரிக்கா அணி 37.2 ஓவர்களில் ஒரே ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 206 ரன்கள் எடுத்து 9 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டூபிளஸ்சிஸ் 96 ரன்களும், ஆம்லா 80 ரன்களும் எடுத்தனர்.
 
இந்த வெற்றி தென்னாப்பிரிக்காவுக்கு இந்த தொடரில் கிடைத்த இரண்டாவது வெற்றி ஆகும். இந்த வெற்றியால் தென்னாப்பிரிக்கா அரையிறுதிக்கு செல்ல முடியாது என்றாலும் இதுவொரு ஆறுதல் வெற்றியாக அந்த அணிக்கு அமைந்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லுங்கி இங்கிடிக்குப் பதிலாக ஜிம்பாப்வே வீரரை ஒப்பந்தம் செய்த RCB!

டீம் வெற்றிக்கு கேப்டன்தான் காரணம்.. வெளில உட்காந்திருப்பவர் அல்ல! - கம்பீரை தாக்கிய கவாஸ்கர்!

ஆசிய கிரிக்கெட் தொடர்களில் இருந்து வெளியேற பிசிசிஐ முடிவு!

டி 20 போட்டிகளில் கோலியின் மற்றொரு சாதனையை முறியடித்த கே எல் ராகுல்!

உடல் எடையைக் குறைத்து விமர்சனங்களுக்குப் பதிலளித்த சர்பராஸ் கான்!

அடுத்த கட்டுரையில்
Show comments