Publish Date: Mon, 21 Sep 2026 (21:31 IST)
Updated Date: Mon, 21 Sep 2026 (21:34 IST)
80களில் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகைகளாக வலம் வந்தவர்கள் அம்பிகா, ராதா. இவர்கள் இருவரும் சகோதரிகள். கேரளாவை சேர்ந்தவர்கள். 80களில் முக்கிய ஹீரோக்களாக வலம் வந்த ரஜினி, கமல், மோகன், விஜயகாந்த், பிரபு, சத்யராஜ், கார்த்திக் போன்ற நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்திருக்கிறார்கள்.
சினிமாவில் சம்பாதித்த பணத்தை ஹோட்டல் தொழில், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல தொழில்களிலும் அவர்கள் முதலீடு செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில்தான், தனது சகோதரி அம்பிகா ரூ.46 கோடி செக் மோசடி செய்துவிட்டதாக அவரின் சகோதரி ராதா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளித்தார்..
இந்நிலையில், இது தொடர்பாக விளக்கமளித்துள்ள அம்பிகா தரப்பு ‘காசோலைகள் முறைகேடாக பயன்படுத்தப்படவில்லை.. அவை சகோதரிகளுக்கு இடையிலான சமரசத்தின் அடிப்படையில் வழங்கப்பட்டவை.. நிலம், தொழில், தங்கம் தொடர்பான விவகாரங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் மற்றும் புகார்களின் பின்னணியை மறைத்து விட்டு காசோலை விவகாரத்தை மட்டும் ராதா முன்னிலைப்படுத்துகிறார்’ என தெரிவித்திருக்கிறது.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்.....
மேலும் படிக்க